புதன், 21 டிசம்பர், 2022

கீழ்பவானி பிரதான வாய்க்காலில் இரு கரைகளிலும் உடைப்பு சரி செய்யும் இன்னும் இரு தினங்களுக்கு நிறைவடைந்தவுடன், வருகின்ற 24ம் தேதி முதல் பாசனத்திற்காக வாய்காலில் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உறுதி..

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள கீழ்பவானி பிரதான வாய்க்காலில் கடந்த வாரம் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வாய்க்காலில் வந்து கொண்டிருந்த 1300 கனஅடி தண்ணீர் அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைபயிர்களை மூழ்கடித்தது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று உடைப்பினை சரி செய்யும் பணியில், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் இரவு பகலாக மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நேறிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, ""வரும் 24ஆம் தேதி அன்று உடைப்பை சரி செய்யும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து கீழ்பவானி பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்"" என்று கூறினார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது, ""கடந்த 10 தினங்களாக நடைபெற்று வந்த கால்வாய் சீரமைக்கும் பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், இரண்டு தினங்களுக்குள் சீரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றும் அதனைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறினார். மேலும் தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு குறித்து அரசிடம் எடுத்துக் கூறி விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: