திங்கள், 19 டிசம்பர், 2022

எலக்ட்ரிசிட்டி போர்ட் இன்ஜினியருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ..!

ஈரோடு தவுட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏ.எம்.ஈஸ்வரமூர்த்தி, இவருக்கு சொந்தமான குடோனுக்கு கரண்ட் கனெக்சன் பெறுவதற்காக தவிட்டுபாளையம் எலக்ட்ரிசிட்டி போர்ட் ஆபீஸில் கடந்த 2005-ம் ஆண்டு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை எலக்ட்ரிசிட்டி போர்ட் இன்ஜினியர் சி.ராமலிங்கம் என்பவர் கரண்ட் கனெக்சன் கொடுப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது, ஈஸ்வரமூர்த்தி கொடுக்க மறுத்து வந்தார். ஆனால் கரண்ட் கனெக்சன் கொடுக்க வேண்டும் என்றால் கட்டாயமாக லஞ்சம் வேண்டும் என்று ராமலிங்கம் வற்புறுத்தி உள்ளார். இதனையடுத்து ஈஸ்வரமூர்த்தி ஈரோடு மாவட்ட ( விஜிலென்ஸ் ) லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினருக்கு புகார் கூறியுள்ளார், பின்னர் விஜிலன்ஸ் காவல்துறையினரின் அறிவுரையின் பேரில் கடந்த 3.3.2005 அன்று காலை 9.15 மணிக்கு எலக்ட்ரிசிட்டி போர்ட் இன்ஜினியர் ஆஃபீஸில் வைத்து ஈஸ்வரமூர்த்தி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளார், அப்போது ஆபீஸில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஜினியர் ராமலிங்கத்தை பணத்துடன் பிடித்தனர். இதுதொடர்பாக ராமலிங்கத்தின் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட ராமலிங்கத்துக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: