புதன், 28 டிசம்பர், 2022

கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை அறிவாளால் வெட்டி தலையை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற கணவனுக்கு கொலை குற்றத்திற்கு ஆயுட்கால கடுங்காவல் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...

கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்தவர் ஜெயராமன், இவரது மகன் முனியப்பா. இவரது மனைவி நிவேதிதா, 19.. காதலித்து திருமணம் முடித்த இருவரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு குடி வந்தனர்..இருவரும் அருகே இருந்த கேஸ் கம்பெனியில் பணியாற்றினர். சமூக வலைதளங்களில் பொழுதை கழித்து வந்த நிவேதிதாவுக்கு சிலருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்துக்கு மீறிய பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாதத்தில் நிவேதிதாவும் அவரது கள்ளக்காதலனும் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. வேலைக்குச் சென்ற முனியப்பன் இருவரும் தனிமையில் இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தார். நிவேதிதாவை கண்டித்ததுடன் உக்கிர கோபம் கொண்டு தன் காதல் மனைவியை அறிவாளால் வெட்டி கொலை செய்தார். மனைவியின் தலையை மட்டும் வெட்டி தன் இருசக்கர வாகனத்தின் முன்பதாக வைத்துக்கொண்டு பெருந்துறை அடுத்த வாவிக்கடை அருகே உள்ள கீழ்பவானி கால்வாயில் மனைவியின் தலையை வீசி சென்றார். அதிர்ச்சி அடைந்த சிலர் இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்துக்கு புகார் அளித்திருந்த நிலையில் முனியப்பன் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கில் நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார்.. அதில் கொலையாளி முனியப்பாவிற்கு ஆயுட்கால கடுங்காவல் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பரபரப்பான இக்கொலை சம்பவத்தில் அரசு சார்பாக வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: