வெள்ளி, 16 டிசம்பர், 2022

மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை முதல்வரிடம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை முதல்வரிடம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கலை கல்லூரியின் கூட்டரங்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்ட தொடக்க விழா நடந்தது, பயிற்சியை துவக்கி வைத்த பின்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்... புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது, இப்பொழுது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன, டிசம்பரில் இது முடிவடையும் ஜனவரியில் முதல்வரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன் பிறகு முதல்வர் அதை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார், நடப்பாண்டு, தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதில் ஈரோடு மாவட்டத்தின் இலக்கு 23 ஆயிரத்து 598 கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன் தந்தது இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயன் அடைவார்கள் அமைச்சர் முத்துசாமி கூறியது போல் தமிழகத்தில் ஒருவர் கூட கல்லாதவர் இல்லை என்ற நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது, பள்ளிக் கல்வித் துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன, புதிதாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார், அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம், பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதல்வர் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார், ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கூட போதை பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார், எனவே கல்வி கூடங்களில், மாணவ, மாணவியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என பேட்டியளித்தார். விழாவில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுண்னி, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உட்பட பல உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: