வியாழன், 15 டிசம்பர், 2022

இறுதிப் பயணத்தை மேற்கொண்டவர்களின் ஆத்மாவை திருப்தி அடையச் செய்யும் உயரிய சேவை ஈரோட்டில் தொடங்கியது ..!

கிராமப் புறத்தில் வசிக்கும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்க ஈரோட்டில் முதன்முறையாக நடமாடும் எரியூட்டு தகன வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது... இத்திட்டம் ரோட்டரி சங்க நன்கொடையாளர்கள் உதவியுடன் தமிழகத்தில் முதல்முறையாக ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது... ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ரோட்டரி ஆத்மா மின் மயான அறக்கட்டளை சார்பில், ஈரோடு காவிரி கரையில் மின் மயானம் அமைக்கப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது, அதன் தொடர்ச்சியாக கிராமப் புறத்தில் வசிக்கும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடமாடும் எரியூட்டு வாகனம் ஈரோடு சென்ட்ரல், ரோட்டரி சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடமாடும் எரியூட்டும் தகன தொடக்க விழா நடைபெற்றது.
ரோட்டில் வாகன சேவை எரியூட்டும் வாகன இயக்கத்தை தொடங்கி வைத்த ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் சகாதேவன் கூறுகையில், இத்திட்டம் ரோட்டரி சங்க நன்கொடையாளர்கள் உதவியுடன் தமிழகத்தில் முதல்முறையாக ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்ய வேண்டுமானால் ரூ.15,000 வரை செலவாகும். எரியூட்ட சுமார் 8 மணி நேரம் ஆகும். இந்த வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் எரியூட்டப்படும். இதற்காக ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது, இத்தொகையை கூகுள்பே அல்லது போன்பே மூலமாகவும் செலுத்தலாம். இந்த ஏரியூட்டு வாகனம் மாநகராட்சிக்கு வெளியேயும், குடியிருப்புப் பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் நிறுத்தப்பட்டு சடலம் எரியூட்டப்படும் என்பதுடன், 96557-19666 என்ற கட்டணமில்லா கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம், பதிவு செய்யும் நபர்கள் உறுதிமொழிப் படிவம் மற்றும் ( இறந்தவர் + உறவினரின் ஆதார் அட்டை ) அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்றார். இவ்விழாவில் அக்னி ஸ்டில்ஸ் நிர்வாக இயக்குனர் தங்கவேலு, செங்குந்தர் பள்ளி தாளாளர் சிவானந்தம், ஆர் ஆர் துளசி பில்டர்ஸ் சத்தியமூர்த்தி, ஆத்மா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் இ.சகாதேவன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.இளங்குமரன், ஆத்மா அறக்கட்டளை செயலாளர் வி.கேராஜமாணிக்கம், பொருளாளர் எஸ்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: