சனி, 17 டிசம்பர், 2022

உச்ச நீதிமன்றத்திடமே நீதி இல்லையென்றால் மக்கள் எங்கு செல்வார்கள்?மகளிர் ஆணையத் தலைவர் வேதனை

உச்ச நீதிமன்றத்திடமே நீதி கிடைக்காவிட்டால் மக்கள் எங்கு செல்வார்கள் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வேதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்திடமே நீதி கிடைக்காவிட்டால் மக்கள் எங்கு செல்வார்கள் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வேதனை தெரிவித்துள்ளார். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் நடந்த கலவரத்தில் ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு ஒரு கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார், அவரின் இரண்டரை வயதுக் குழந்தை உள்ளிட்ட 7 பேரையும் அவர் கண்முன்னே கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது. இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை நன்நடத்தை அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலையாகினர். இந்த 11பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.  பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் துணைப்ப திவாளர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் “ நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனு மீது கடந்த 13ம் தேதி விவாதிக்கப்பட்டது. அந்தமனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் “ பில்கிஸ் பானுவின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பில்கிஸ் பானு 21வயதாக இருக்கும்போது, கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டார், அவரின் 3வயது குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: