சனி, 14 ஜனவரி, 2023

தமிழ் மண் வீரத்தின் அடையாளமான கலைகளுடன் ஈரோட்டில் பொங்கல் விழா..!

ஈரோடு கருங்கல்பாளைம், காவிரி ஆற்றங்கரையோரத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஐந்து நிலங்களுக்கான பொங்கல் வைத்து ஐந்து வகையான கலைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய கலைத்தாய் பிள்ளைகள் ..! ஈரோடு கலைத்தாய் அறக்கட்டளை சார்பில், கருங்கல்பாளையம் காவிரியில் ஆற்றங்கரையோரத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நம் வாழ்வியலை பிரதிபலிப்பதாக கூறி, ஐந்து வகையான பொங்கலிட்டனர். பின், பசு, காளை, கரும்பு, விளை பொருட்கள், கலைப் பொருட்களை வைத்து சூரிய வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் ஐந்து நிலங்களின் கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டை, குச்சியாட்டம், பெரிய கம்பாட்டம், கோலாட்டம், கரகாட்டம் சிலம்பம் என நிகழ்த்தி காட்டினர். நாட்டுப்புற கலைஞர், விவசாயிகள், இளைஞர்கள், சிலம்பப் பயிற்சி சிறுவர் சிறுமியர்களை பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கலைத்தாய் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன் கூறுகையில் ... தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கலை விழாவாக ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ஆற்றங்கரையோரத்தில் பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்து வகை நிலம் சார்ந்த பொங்கல் கலை விழாவில் தப்பாட்டம், சாட்டை குச்சி ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட மண்சார்ந்த கலைகளுடன் மிகுந்த உற்சாகத்துடன் பொங்கல் விழா களை கட்டியுள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கலைத்தாய் அறக்கட்டளை, ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று இவ்வமைப்பு முன்னெடுக்கும் தமிழர் பண்பாட்டுக் கலை விழாவில் ஐந்திணைகளுக்கும் ஐந்து பொங்கல் வைத்து அந்நிலங்களுக்கான கலைகள் அரங்கேற்றப்படுகின்றன. பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்களால் நிகழ்த்தப்படும் இந்நாட்டுப்புறக் கலைகளில் கிராமிய மணம் கமழும், பாரம்பரிய உடையணிந்து மாணவர்களும், மாணவிகளும் ஒருமித்த அசைவுகளில் நளினத்தை வெளிப்படுத்தி ஆடுவது பொங்கல் ருசி, நமது நாட்டுப்புறக் கலைகளுக்குள் நமது தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் முறைகள் பதிவாகியிருக்கின்றன என்றும், அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் வளமான சமூகத்தை உருவாக்க இயலும், பொங்கல் என்பது நமது தமிழ்ச் சமூகத்துக்கான பண்டிகை என்பதால், இந்நன்நாளில் தமிழ் கலைகளை அரங்கேற்றுகிறோம், நிலங்களின் தன்மையை அடிப்படையாக வைத்து அதனை ஐந்திணைகளாகப் பிரித்திருக்கிறோம் என்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: