புதன், 11 ஜனவரி, 2023

ஈரோட்டில் உள்ள ஆர்டி நேஷனல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கலோஜில் சமத்துவ பொங்கல் விழா... பாரம்பரிய உடையில் ஆட்டம் பாட்டத்துடன் கலக்கலாக கொண்டாடிய கல்லூரி மாணவ மாணவிகள்..!

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பிரிவில் உள்ள ஆர்டி நேஷனல் காலேஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய உடையான வண்ண, வண்ண வேட்டி சேலைகளை அணிந்து வந்து உற்சாக நடனமாடி சமத்துவ பொங்கலிட்ட மாணவிகள் பொங்கலை வரவேற்று மாணவிகள் வரைந்த வண்ணகோலங்கள்... தமிழ் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டது. இந்த இசைக்கு ஏற்றவாறு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உங்கள் குத்து நடனம் ஆடி அசத்தினர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற ஹிந்து, கிறிஸ்துவ இஸ்லாமிய மாணவிகள் முகமதா ஹாதிலா, லிடே கேத்தரே, சுவாதி கூறுகையில் ... தமிழ்நாட்டில், எந்த பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு உண்டு. இந்த பண்டிகை ஜாதி, மாதங்களை கடந்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், உழைப்பை போற்றும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு, கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து கல்வி பயிலும் மாணவ மாணவிகள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைத்தும், இங்கு இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பு மாணவ மாணவிகள் ஒன்று கூடி பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறோம், பாரம்பரிய விளையாட்டுகளான உறியடித்தல், கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உற்சாகமடைந்ததாக கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: