புதன், 11 ஜனவரி, 2023

மது போதையில் வாகனங்களை இயக்கினால் மரணம் நிச்சயம் என சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..!

மது போதையில் வாகனங்களை இயக்கினால் மரணம் நிச்சயம், இரண்டு சக்கர வாகனங்களில் சாலைகளில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோஷங்களை எழுப்பியவாறும், கைகளில் பதாகைகளை ஏந்தி பள்ளிக் குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர். ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் இயங்கி வரும் SMVB பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு வார பேரணி இன்று நடைபெற்றது. இப்பேரணி ஈரோடு காளிங்கராயன் இல்லத்திலிருந்து, பெருந்துறை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
இப்பேரணியில் பள்ளியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், எஸ்.எம்.வி.பி பள்ளியின் முதல்வர் வெங்கடேசன், சூரம்பட்டி காவல் நிலையம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோபால்சாமி, சூரம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், ஆகியோர் பேரணியை துவங்கி வைத்தார். ஈரோடு மாநகர பொதுமக்கள் மத்தியில் பள்ளி குழந்தைகள், விழிப்புணர்வு வாசகம் பதிக்கப்பட்ட பதாகைகளுடன், முழக்கங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் மக்களுக்கு சாலை விதிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேரணியாக சென்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: