ஞாயிறு, 29 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு EVKS இளங்கோவனுக்கு தேர்தல் பணி ஆற்றுவது குறித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இன்று காலை பெருந்துறை சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் அமைந்துள்ள தேர்தல் பணிமனையில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, பொது பனித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலா துறை அமைச்சர் உதகை ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவன், பாராளுமன்ற திமுக,உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3.2.2023 மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் 1. 2. 2023 அன்று மாலை பிளாட்டினம் மஹாலில் நடைபெற உள்ளது பொதுக் கூட்டங்களை விட மக்களை நேரில் சந்திப்பது சிறந்தது என்பதால் நேரிடையாக சந்தித்து வாக்கு சேகரிக்கிறோம். இவ்வாறு முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டியளித்தார்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: