திங்கள், 20 பிப்ரவரி, 2023

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! எப்போது வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி..!


ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களே 7 நாட்கள் ஷேவ் பண்ணாம இருந்தா எல்லாருக்கும்தான் மீசை வரும். பெரியார் மண்ணில் நின்று கொண்டு ஆண் பிள்ளையா? என்று கேட்கிறீர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, உதயநிதி பேசுகையில் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன்.

கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி மீசை வைத்த ஆம்பளயா, வேட்டி கட்டிய ஆண் பிள்ளையா என கேட்டார், 2016ம் ஆண்டு தலைமை செயலகத்தில் சிபிஐ சோதனை செய்தபோது, அவரது வாய்க்கு ஜிப்பாக அவரது மீசை மாறியது. கொடநாடு என்ற பேரைக் கேட்டாலே அவரது மீசை காதுகளை மூடிக்கொள்கிறது. 

தூத்துக்குடியில் அப்பாவிகள் 13 பேரின் கழுத்தை நெரிக்க கயிறாக அவரது மீசை இருந்தது. இரு பெண்களின் கால் செருப்பிற்கு பாலீஸ் போடும் பிரஸ்ஸாக அவரது மீசை இருந்தது. எந்த பயனும் இல்லாத அந்த மீசையைத்தான் தமிழக மக்கள் மழுங்கடித்தனர்.

மேலும் திமுகவின் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார். பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது தான்.  பெண்களுக்கான உரிமைத்தொகை அதிகபட்சமாக 5 மாதங்களுக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துள்ளாதக தெரிவித்தார். 

முழுமையான கிளிக் செய்யவும் ...

https://youtu.be/xka-bX4AOg4



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: