வியாழன், 2 பிப்ரவரி, 2023

ரெட்டை இல்லைனா என்ன ? பலாப்பழம் இருக்கே..!

அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் சசிகுமார் என்பவர் பலாப்பழம் சின்னத்தின் பதாகைகளை கையில் ஏந்தி  போட்டியிடுவதாக, தனது ஆதரவாளர்களுடன் கடைக்கடையாக ஏறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில், தனது கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவது குறித்து   அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வி.செந்தில்குமார் ஸபா ந.நீயூஸ்தமிழுக்கு அளித்த பேட்டியில் ...

கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் பலாப்பழ சின்னத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டோம், தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்களுக்கான நல திட்டங்களை செயல்படுத்த வேண்டும், இந்த தேர்தலில்  பணத்தை கொடுத்து வெற்றி பெற வெற்றி விடலாம் என்ற சூழ்நிலையில், பணம் இருந்தால் மட்டும் பத்தாது நல்ல மனிதர்கள் வேண்டும் என்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களின் எண்ண  ஓட்டத்தை வெளிக்கொணர, நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம், ஈரோடு கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் சசிகுமார் அவர்களை களம் காண, எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வைத்துள்ளோம்.

அதிமுக - திமுக என்ற இரு கட்சிகள் மாறி, மாறி கொள்ளையடித்துக் கொண்டிருக்க கூடிய இந்த நிலையில், நாங்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர், நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் பலாப்பழ சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகி வருகின்றனர், கட்டாயமாக நீங்கள் வெற்றி அடைவீர்கள் எனவும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை நடந்த பொதுத் தேர்தல், அதே போல 2022 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும், தேர்தல் ஆணையம் எங்களுக்கு பலாப்பழ சின்னத்தை கொடுத்துள்ளது, அதே அடிப்படையில், இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பலாப்பழம் சின்னத்தை ஒதுக்குவார்கள் என நம்புகிறோம், 

அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய முப்பெரும் தலைவர்களின் வைத்து, அண்ணா புரட்சித் தலைவர் அம்மா  திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நல் எண்ணத்துடனும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பின்னர் அதிமுக என்ற கட்சியை அழிந்துவிட்டனர், அதிமுக என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது, அதனை மீட்டெடுக்கும் முயற்சியாகயாகவும், இந்த முப்பெரும் தலைவர்களின் கொள்கை கோட்பாட்டுடன், எங்களது கட்சியை வேட்பாளர் இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டிட்டுள்ளார், எனவும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 39 + 1 தொகுதிகளிலும் தனித்து எங்களது கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிடுவார்கள் என பேட்டி அளித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: