புதன், 1 பிப்ரவரி, 2023

பாரம்பரிய நெல் வயல்: வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் குழு பார்வை


ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள பாப்பாங்காட்டூர், நல்லிகவுண்டனூர், வேலம்பாளையம், அய்யம்பாளையம் பகுதிகளில் பாரம்பரிய நெல் வகைகள் பயிரிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய ரகங்கள் கருப்பு கவுனி, மாப்பிளை சம்பா, சீரக சம்பா, தூயமல்லி, காலம் நமக்கு போன்ற ரகங்கள் வயலில் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. உழவர் விவாதக் குழு அமைப்பாளரும், இயற்கை விவசாயிமான ஆர்.சென்னியப்பன் பயிரிடப்பட்டுள்ள நெல் வயலை ஜே.கே.கே. வேளாண்மைக் கல்லுரி மாணிவிகள் குழுவினர் டி.ஹர்த்திகா, வே.காயத்ரி, பா.காயத்ரி பிரியா, கோலநந்தினி உள்ளிட்ட 11 மாணவிகள் பார்வையிட்டனர். ஆர்.சென்னியப்பன் பராம்பரிய நெல் சாகுபடி முறைகள் அரிசி வகையின் சிறப்புகள் பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார். நிகழ்ச்சியில்m துணை வேளாண்மை அலுவலர் டி.அப்புசாமி, உதவி வேளாண்மை அலுவலர் கோ.கண்ணன், சுரேஷ், மாவட்ட உழவர் விவாதகுழு செயலர் பா.மா. வெங்கடாசலபதி, யு8பி பாசன சபைத் தலைவர் பி.ஆர்.ஏகாம்பரம்m ஊராட்சி மன்ற உறுப்பினர் ஏ.எஸ்.சிவக்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் பா.அ. சென்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: