வியாழன், 16 மார்ச், 2023

அதிமுகவின் நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


ஈரோடு வீரப்பன்சத்திரம்  பஸ் நிறுத்தம் அருகே இன்று அதிமுக சார்பில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான  செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார்,  

அப்போது அவர் கூறும் போது,
அதிமுகவின் மக்கள் சக்தியாக முன்னாள் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா இருந்தனர்,

அவர்கள் வழியில் மக்கள் சக்தியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை போலீசார் தடுத்து நிறுத்தாமல் அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது  கண்டனத்துக்குரியது. 

அதிமுக சார்பில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றதும் அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டது. ஒரு அரசு மக்களின் சாதனை அரசாக தான் இருக்கணும். ஆனால் திமுக வேதனை அரசாக உள்ளது, விலைவாசியை உயர்வு பால் மின் கட்டணம் குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியின் நான்கரை ஆண்டு ஆட்சி காலம் தமிழகத்தில் அமைதி பூங்காவாக உள்ளது, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 

திமுகவை எடப்பாடி பழனிசாமையால் மட்டுமே தட்டிக் கேட்க முடியும். காற்றை சுவர் எடுத்து தடுக்க முடியாது. கடலை அணை கட்டிய தடுக்க முடியாது. 

அதே போல் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.

இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான  செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அவருக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்.  முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுபோன்று செயலில் இனி ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் அதிமு.வில் உள்ள அத்தனை பேரும் எந்த தியாகத்தையும் செய்வோம். 

உச்சநீதிமன்றமே அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.  அவர் சார்பில் நீக்கப்பட்டது அனைத்தும் செல்லும் என்றும், தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே அவர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் அவர் வரப்போகிறார். மிக விரைவில் அவர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என பேசினார்.

முன்னாள் மேயர் மல்லிகை பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே சி பழனிச்சாமி, முன்னாள் எம்பிக்கள் செல்வகுமாரசின்னையன், சத்தியபாமா, ஈரோடு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன் உள்பட 500க்கும் மேற்பட்ட அதிமுக தொடண்டர்கள் கலந்து கொண்டனர், 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: