ஞாயிறு, 8 அக்டோபர், 2023

ஈரோட்டில் 2வது நாளாக நடந்த கொங்கு கோப்பை போட்டிகள்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி நடத்தும் பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான 'எட்டாவது கொங்கு கோப்பை' விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று (ஞாயிற்றுக்ழமை) காலை 6 மணி முதல் தகுதிச்சுற்றுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன. இரண்டாம் நாளும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் வருகை புரிந்தனர்.

இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் 1700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அடங்கிய 136 அணியினர் பங்கேற்றனர். இரண்டாம் நாள் தகுதிச்சுற்று போட்டிகள் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மைதானம், கொங்கு பொறியியல் கல்லூரி மைதானம் மற்றும் கொங்கு நேஷ்னல் பள்ளி மைதானம் என மூன்று மைதானங்களில் 20 க்கும் மேற்பட்ட தனித்தனி ஆடுகளங்களில் தலா 5 நடுவர்கள் மற்றும் கள ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிப்பில் நடைபெற்றன. மூன்றாம் நாள் அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

 மாணவ மாணவியர் போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்கும் வகையில் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து என அனைத்து வசதிகளையும் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இறுதிச்சுற்று போட்டிகள் நாளை நடைபெறும், கொங்கு கோப்பை போட்டியின் நிறைவு நாளான திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெறும். அவ்விழாவிற்கு கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரியப் பாதுகாவலர் கிருஷ்ணன் தலைமை வகிக்கிறர். ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் சதீஷ்குமார், கல்லூரியின் முன்னாள் மாணவரும் காவல் உதவி ஆய்வாளருமான ரூபன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: