ஞாயிறு, 26 நவம்பர், 2023

மனைவி, குழந்தை மாயம்; ஈரோடு எஸ்பியிடம் வாலிபர் புகார் மனு

செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஒன்றை வயது குழந்தையுடன் மாயமான எனது மனைவியை கண்டுபிடித்து மீட்டுத் தருமாறு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மன வேதனையுடன் புகார் அளித்த கணவர்

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் மோகன் குமார் (28) இன்று ஈரோடு எஸ்.பி.யிடம் அளித்த புகார் மனுவில், என் மனைவி ஜோதி (23) எங்களுக்கு 2021ல் திருமணம் நடந்தது. ஜோதி கர்நாடகாவை சேர்ந்தவர். ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளார். 23ம் தேதி காலை வேலைக்கு சென்று விட்டேன். பின் என் மனைவிக்கு போன் செய்தேன். அப்போது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை. இனி போன் செய்ய வேண்டாம். மருத்துவமனை சென்று விட்டு வீடு வந்த பின் போன் செய்வதாக ஜோதி தெரிவித்தார்.

அதன்பின் 2 முறை போன் செய்தேன். அப்போது மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. வேலை முடிந்து மாலையில் வீட்டு வந்தேன். வீடு பூட்டி இருந்தது. மனைவி, குழந்தை குறித்து அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும் பலன் இல்லை. 24ம் தேதி மதியம் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து எனது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மனைவி, குழந்தையை நினைத்து எனக்கும், குடும்பத்தாருக்கும் பயமாக உள்ளது. எனவே இருவரையும் கண்டுபிடித்து தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: