வெள்ளி, 1 டிசம்பர், 2023

அறச்சலூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலோடு உறவினர்கள் சாலை மறியல்

அவல்பூந்துறை அருகே விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் எடுத்து வரப்பட்ட அமரர் ஊர்தியுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக அறச்சலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள அவல்பூந்துறை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (55). பெயிண்டர். இவரது மனைவி ரெஜினா (50). இவர்களது மகன் ராஜா (23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்காக குடிநீர் குழாய் அமைப்பதற்காக ரோட்டின் குறுக்கே குழி தோண்டி பைப் லைன் பதித்து அதன் மீது மண் கொட்டி மேடு அமைத்துள்ளனர். 

இந்த நிலையில் ராஜா நேற்று இரவு வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு தனக்கு பைக்கில் வந்து கொண்டு இருந்த ராஜா சோளிபாளையம் அருகே பைப் லைன் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியின் மண் போட்டு மேடாக இருந்ததை கவனிக்காமல் அதன் மீது வேகமாக வந்த போது நிலை தடுமாறி எதிரில் நிறுத்தி இருந்த பிக்கப் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இதில் படுகாயம் அடைந்த ராஜாவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது தந்தை விஜயன் கொடுத்த புகாரின் மீது அறச்சலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விபத்துக்கு காரணமான தனியார் திருமண மண்டபத்திற்காக பைப் லைன் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியை  மூடி சரி வர அமைக்காததால் அதன் மீது மோதி நிலை தடுமாறி வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்ததை அடுத்து பலியான ராஜாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரேதத்தை கொண்டு வந்த அமரர் ஊர்தியை அதே இடத்தில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்ததால் மொடக்குறிச்சி தாசில்தார் ஜெயமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட மண்டப உரிமையாளரை வரவழைத்து விசாரணை நடத்துவதாக கூறியதை அடுத்து அனைவரும் கலந்து சென்றனர்.
இதனால் ஈரோடு - பழனி செல்லும் ரோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: