திங்கள், 4 டிசம்பர், 2023

அந்தியூர் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழு ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் மாநில குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், தேசிய தரச்சான்று குழுவினைச் சேர்ந்த மருத்துவர்கள் சவிதா, சீனிவாச வர்மா, நிகினி பவுலோஸ் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் போது பிரசவ வார்டு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் ரத்த வங்கியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கர்ப்பிணிகளிடம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்த குழுவினர், சிகிச்சைக்கு வந்தவர்களிடம் சிகிச்சை முறை குறித்து விசாரித்தனர்.

பின்னர், இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- இந்த ஆய்வு இன்று (டிச.4) முதல் 6ம் தேதி வரை அதாவது மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவுகளின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்து 70 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண்கள் பெற்றால், அம்மருத்துவமனைக்கு தேசிய தர உறுதிச்சான்று வழங்கப்படுகிறது.

இந்த ஆய்வு குறித்த முடிவை நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். மத்திய அரசு கூறியுள்ள விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் மருத்துவமனைக்கு நிதி வழங்கப்படும். அதன் வாயிலாக மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். அதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதுஎன அவர்கள் தெரிவித்தனர். 

முன்னதாக, தேசிய தர மதிப்பீட்டு குழுவினரை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த ஆய்வின்போது தலைமை மருத்துவர்கள் விஸ்வேஸ்வரய்யா, கவிதா, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: