திங்கள், 18 டிசம்பர், 2023

நெசவாளர்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு

ஈரோடு மாவட்டம், மொடக்கு றிச்சி தாலுகா, புஞ்சை காளமங்கலம், கருப்பகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த நெசவாளர்கள், செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் தலைமையில்,  செயலாளர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் முன்னிலையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


எங்கள் ஊரில் 40 கைத்தறி நெசவாளர்கள் குடும்பம் பல தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசாங் கத்தால் 77 சென்ட் இடம் பாவடிக்கு என ஒதுக்கீடு செய்திருந்தனர். அந்த இடத்தையொட்டி 3 தனி நபர்களது நிலங்களும் உள்ளன.

அவர்கள், பாவடி நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு நடப்பட்டிருந்த கற்களை அகற்றிவிட்டனர். அது குறித்து, கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தாரிடம் மனு அளித்திருந்தோம். அதைத் தொடர்ந்து, அங்கு நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றவும், கற்களை பழையபடி நடவும் தாசில்தார் உத்தர விட்டார். ஆர்.டி.ஓ, டி.ஆர்.ஓ தரப்பில் விசாரித்து தாசில்தார் உத்தரவும் உறுதி செய் யப்பட்டது.

இருப்பினும், இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றி, பாவடிக்கான கற்களை நட விடாமல் அங்குள்ளவர்கள் தடுத்து வருகின்றனர். எனவே, உரிய பாது காப்புடன், பாவடிக்கான இடத்தை மீட்டு, அங்கு மீண்டும் கற்கலை நடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: