வெள்ளி, 19 ஜனவரி, 2024

காலிங்கராயன் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை

காலிங்கராயன் கால்வாயை பாசனத்துக்கு அர்ப்பணித்த, காலிங்கராயருக்கு தை ஐந்தாம் நாள் விழாவையொட்டி, பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் அமைந்துள்ள அவர் சிலைக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது. 

ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், விவசாய பிரிவு மாநிலச் செயலாளர் முருகேஷ் ஆகியோர் தலைமையில் தமிழ் மாநில காங்கிரசின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான விடியல்சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட தொழிற்சங்க பேரவை தலைவர் ரபிக் என்கிற ராஜேந்திரன், மாவட்ட மாணவர் அணி தலைவர் நான் அன்புத்தம்பி, விவசாயப் பிரிவு செயலாளர் குமார், வெண்டிபாளையம் தர்மன், ராயபாளையம் ஒன்னாவது மண்டல தலைவர் கண்ணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: