திங்கள், 5 பிப்ரவரி, 2024

இந்தியாவில் 230 லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிப்பு; மருத்துவர் தகவல்

இந்தியாவில் 230 லட்சம் மக்கள் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் புற்றுநோய் விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் சுதா ஹாஸ்பிடல் சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை ஈரோடு காலிங்கராயன் இல்லத்திலிருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுதா ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர், ஐஎம்ஏ முன்னாள் தலைவர் டாக்டர் சுகுமார் செல்வா, சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவன தலைவர் பாரதி, நந்தா நர்சிங் கல்லூரி தாளாளர் நந்தகுமார் பிரதீப், நர்சிங் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுகேஸ்வரன் கூறியதாவது:- இந்தியாவில் புற்றுநோய்கள் அதிகம் பாதித்த மக்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் புற்றுநோய் அதிகம் கொண்ட மாவட்டமாக முதலிடத்தில் திகழ்கிறது.

புகையிலை மது சரியான உடற்பயிற்சி இன்மை சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் புற்றுநோய் வருகிறது. கடந்த காலங்களில் 40 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தற்போது 20 வயதிலேயே புற்றுநோய் ஏற்படுகிறது. அதில் 50 முதல் 60 சதவீத மக்கள் மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்தை எட்டியுள்ளனர்.

காலதாமதமாக புற்றுநோய் கண்டறிவதால் இவர்கள் முற்றிய நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றனர் எனவே ஆரம்ப 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: