திங்கள், 26 பிப்ரவரி, 2024

சேலம் மாவட்டம் ஏற்காடு கொலகூர் சாலை பழுது.... பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம்....

ஏற்காடு கொளகூர் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படும் சூழல் நிலவுகிறது!! ஏற்காட்டிலிருந்து நாகலூர் கரடியூர் கொளகூர் சுரக்காய்பட்டி வழியாக கணவாய் புதூர் தீவட்டிப்பட்டி பெங்களூர் பிரதான சாலை செல்லலாம் கொளகூரிலிருந்து பூமரத்தூர் கண்ணப்பாடி வீராட்சியூர் வழியாக பொம்மிடி தர்மபுரி அரூர் பாப்பிரெட்டிப்பட்டி செல்லலாம்!! இந்த சேலம் தர்மபுரி இரு மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலையானது கொளகூரை கடந்துத்தான் செல்ல வேண்டும்!! இந்த கொளகூர் சாலை மிகவும் பழுதடைந்து மண்சாலையாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது பெங்களூர் கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் இவ்வழியாகத்தான் வருகிறார்கள்!!! இந்த சாலை ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்க்கு சொந்தமான சாலை என்பதால் யூனியன் நிதியில் இந்த சாலையை அமைக்க இயலாது!! ஏனென்றால் அவ்வளவு நிதியை யூனியனால் ஒதுக்கீடு செய்வது மிகவும் சிரமம்!! அதனால் இந்த சாலையை நெடுஞ்சாலை துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும்!! கரடியூரிலிருந்து கணவாய் புதூர் வரையில் சுமார் 15 கி.மீ தூரத்திற்க்கு சாலை அமைக்க ஆகும் செலவினத்தை நெடுஞ்சாலை துறையால் தாமதமின்றி நிறைவேற்றிட இயலும் யூனியன் நிதியில் இந்த பணியை மேற்கொள்ள சாலையை தொடர்ந்து பராமரிக்க இயலாது!! நெடுஞ்சாலை துறை இந்த சாலையை ஒப்படைப்பு செய்ய வேண்டுமென்று சம்மந்தப்பட்ட யூனியனுக்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில் தாமதமின்றி இந்த சாலையை நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைத்து உதவினால் நெடுஞ்சாலை துறை கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ளும் இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் பேரூதவியாக இருக்கும்!!! நமது மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்!!! கொளகூரை கடந்து சில கிலோமீட்டர் வனச்சாலை குறுகலாக உள்ளது!! குறிப்பிட்ட அந்த இடங்களில் சாலையை அகலப்படுத்திட வனத்துறையின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது!!! மூன்று துறையின் கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் இருந்தால் இந்த சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: