சனி, 30 மார்ச், 2024

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 31 பேர் போட்டி

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 31 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு நேற்று ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சின்னம் ஒதுக்கப்பட்டது. போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1.கே.இ.பிரகாஷ் (திமுக) - உதயசூரியன்

2. அசோக்குமார் (அதிமுக) - இரட்டை இலை

3. கே.விஜயகுமார் (தமாகா) - மிதிவண்டி (சைக்கிள்)

4. மு.கார்மேகன் (நாம் தமிழர்) - ஒலி வாங்கி (மைக்)

5. ப.ஈஸ்வரன் (பகுஜன் சமாஜ்) - யானை

6. பொ.குப்புசாமி (உழைப்பாளி மக்கள் கட்சி) - வாயு சிலிண்டர்

7. ரா.குமார் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) - தலைக்கவசம்

8. ரா.தண்டபாணி (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) - சிறு உரலும், உலக்கையும்

9. பா.தர்மராஜ் (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) - பலாப்பழம்

10. வ.தனலட்சுமி (நாடாளும் மக்கள் கட்சி) - ஆட்டோ ரிக்ஷா

11. கு.மாதன் (இந்திய கண சங்கம் கட்சி) - வெண்டைக்காய்

12. அ.தி.முனுசாமி (சாமானிய மக்கள் நலக் கட்சி) - மோதிரம்

13. அசோக்குமார் (சுயேச்சை) - குளிர்பதன பெட்டி

14. அமிர்தலிங்கம் (சுயேச்சை) - கரும்பு விவசாயி

15. ஆறுமுகா.ஏ.சி.கண்ணன் (சுயேச்சை) - திருகி

16. ஆனந்தி (சுயேச்சை) - பரிசு பெட்டகம்

17. கீர்த்தனா (சுயேச்சை) - மடிக்கணினி

18. குமரேசன் (சுயேச்சை) - பிரஷர் குக்கர்

19. கோபாலகிருஷ்ணன் (சுயேச்சை) - பானை

20. சண்முகம் (சுயேச்சை) - தென்னந்தோப்பு

21. சபரிநாதன் (சுயேச்சை) - தொலைபேசி

22. செந்தில்குமார் (சுயேச்சை) - சிலேட்டு

23. நரேந்திரநாத் (சுயேச்சை) - தொலைக்காட்சிப் பெட்டி

24. பிரசாத் சிற்றரசு (சுயேச்சை) -7 கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை

25. பிரபாகரன் (சுயேச்சை) - சீர்வளி சாதனம்

26. மயில்சாமி (சுயேச்சை) - கப்பல்

27. மயில்வாகனன் (சுயேச்சை) - படகோட்டியுடன் கூடிய பாய் மரப்படகு

28. மின்னல் முருகேஷ் (சுயேச்சை) - தீப்பெட்டி

29. ரவிச்சந்திரன் (சுயேச்சை) - வைரம்

30. ராஜேந்திரன் (சுயேச்சை) - டீசல் பம்ப்

31. வடுகநாதன் (சுயேச்சை) - கணினி.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: