வெள்ளி, 1 மார்ச், 2024

திமுக நிர்வாகி கொலை வழக்கு: 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ஆராவமுதன். இவர் திமுக காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார். மேலும் வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவம், இருந்த இவர் வண்டலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திமுகவின் முக்கியமான ஒரு பிரமுகராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வண்டலூர் மேம்பாலம் அருகில் உள்ள படப்பை செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக நேற்று இரவு தனது காரில் சென்றார் .

அப்போது, திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் ஆராவமுதன் வந்த காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி திசை திருப்பி பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக கை, கால், மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆராவமுதன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இவரை அருகே இருந்த பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நான்கு தனிப்படையில் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தற்போது இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சத்திய சீலன், முனீஸ்வரன், சம்பத்குமார், மணிகண்டன், தினேஷ் உட்பட ஐந்து நபர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து, சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள ஐந்து குற்றவாளிகளிடமும் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உமாதேவி விசாரணை மேற்கொண்டார். பின்னர், 5 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: