சனி, 9 மார்ச், 2024

குப்பைக்கு சென்ற தங்க காப்பு... கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்...

 
சேலம். S.K. சுரேஷ்பாபு.

குப்பைக்கு சென்ற தங்க காப்பை கண்டுபிடித்து உரியவர்களிடம் கொடுத்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்-பொதுமக்கள் பாராட்டு

சேலம் மாநகராட்சி பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட டன் குப்பைகள் தினந்தோறும் சேகரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது இதன் அடிப்படையில் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள திரையரங்கு வளாகத்தில் நேற்று குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர்.
அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் சேலம் உழவர் சந்தை அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்து தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும் தியேட்டரில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை அதனால் ஏதேனும் இங்கு குப்பை சேகரிக்கும் போது கிடைத்ததா அல்லது இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட குப்பையில் உள்ளதா என்பதை சரி பார்க்கவும் என கேட்டுக்கொண்டனர். 
இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி  தூய்மை பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர்.
சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை மாநகராட்சி தூய்மை பணியாளர் மணிவேல்  கண்டு பிடித்தது தூய்மை பணியாளர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்க காப்பு கிடைத்து விட்டதாக தகவல்  தரப்பட்டதை யடுத்து அவர்கள் நேரடியாக தியேட்டருக்கு வந்து தங்க  காப்பை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்
தியேட்டரில் தவற விட்ட தங்க  காப்பை குப்பைக்கு சென்ற போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு அதில் இருந்த தங்கக் காப்பை கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் மாநாட்சி தூய்மை பணி மீது கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையிலும் வெகுவாக பாராட்டும் வகையில் உள்ளது  
தங்க காப்பை கண்டு பிடித்துக் கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டியும் பெற்று வருகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: