சனி, 23 மார்ச், 2024

முதுகில் குத்தி ஆட்சியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி... தேர்தல் பிரச்சாரத்தில் சேலம் திமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர் டி எம் செல்வகணபதி பேச்சு...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் இன்று சேலத்தில் திமுக வேட்பாளர் முதல் பிரச்சாரம் முதுகில் குத்தி ஆட்சியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி ....
தேர்தல் பிரச்சாரத்தில் டி.எம். செல்வகணபதி பேச்சு.

முதுகில் குத்தி ஆட்சியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி என சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய இந்தியா கூட்டணி சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி பேசினார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய 10.5 சதவீதத்தை திட்டமிட்டு தப்பான அரசாணை போட்டு இருக்கிறது. அதனால் அதனை முறையாக அமல்படுத்த முடியவில்லை எனவும், பாஜக கூட்டணியில் இப்போது இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள்தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை கட்சிக்கு அறிமுகப்படுத்தியது தான் என்றும் அனைவரின் முதுகில் பழனிசாமி குறிப்பாக முத்துசாமி அர்ஜுனன் செங்கோட்டையன் உள்ளிட்ட அனைவரின் முதுகையும் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி எனவும்,இறுதியாக தன்னை முதல்வராகிய சசிகலாவையும் அவர் விட்டு வைக்கவில்லை என விமர்சனம் செய்தார். துரோகத்தைப் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என தெரிவித்தார்.
தமிழக மக்களின் தேவையை அறிந்து தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்து வருகிறார் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறார் எனவும், லட்சக்கணக்கான பேரப்பிள்ளைகளுக்கும் குழந்தைகளுக்கும் இன்றைக்கு காலை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறாரே அதைப்போல இன்றைக்கு பெண்களுடைய சுய உதவி குழுக்கள் கடனை தள்ளுபடி இருக்கிறார்.
இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய்உரிமை தொகையை தந்தாயிருக்கிறார்.  வடக்கு சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ ராஜேந்திரன்  மூலம் இப்பகுதிக்கு பெற்று முடிக்கப்பட்ட பணிகள் 27 கோடியே 39 லட்சம் ரூபாய்க்கு முடிக்கப்பட்டு  இருக்கிறது.
வெள்ளி தொழிலுக்கு பெயர் போன சேலம் மாவட்டத்தில் வெள்ளித் தொழிலை மேம்படுத்த அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் எனவும், சேலத்தில் மிகப்பெரிய சில்வர் பார்க் 600 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என தெரிவித்தார்அமைக்கப்படும் என தெரிவித்தார்.
ஆதார் கார்டு வாங்க வேண்டுமா ரேஷன் கார்டு வாங்க வேண்டுமா மின்சார இடத்தில் பெற வேண்டுமா அல்லது டிரைவிங் லைசன்ஸ் பெற வேண்டுமா இப்படி அன்றாட வாழ்க்கையில் தேவைப்படுகிற அத்தனை காரியங்களையும் ஒரு சென்டர் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உருவாக்கி அவர்கள் பயன்படுத்தி அதன் மூலமாக இந்த விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கும் அதிலே அவர்கள் அரசாங்கத்தோடு தொடர்பு கொள்வதற்கும் உருவாக்கப்படும்  என்பதை நான் அன்போடு இந்த தொகுதி மக்களுக்கு தான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் எனவும்,
ஸ்மார்ட் சிட்டியில் இன்றைக்கு பல்வேறு பணிகள் தலைவருடைய ஆட்சி காலத்தில்  நடைபெற்றிருக்கிறது. மாணவர்கள் இன்றைக்கு பலரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்கிற வகையில் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி செய்கிற வகையில் இன்றைக்கு அதை நான் உறுதியாக உருவாக்க முயற்சி எடுப்பேன், அதேபோல நாடாளுமன்ற உறுப்பினருடைய பணம் இந்த தொகுதியின் உடைய பங்கு நாடாளுமன்ற மேம்பாட்டு நிதி என்று சொல்லுவார்கள் அந்த நிதியின் மூலமாக நம்முடைய சேலம் மாநகரத்துக்கும் சேலம் நாடாளுமன்ற தொகுதியிலே இருக்கிற சாலைகளை பயன்படுத்துவதற்கும் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் நான் பாடுபடுவேன்.
அதைப்போல இன்றைக்கு மக்களுக்கு  உதவிக்கரம் வேண்டுகிற வகையிலே இந்த ஆறு சட்டப்பேரவை  தொகுதியை கொண்டு இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர் வருடம் தோறும் ஆயிரம் ஏழை எளிய மக்களை தத்தெடுத்து டிரஸ்ட்  உருவாக்கப்பட்டு அதன் மூலமாக ஆயிரம் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
தமிழகத்தில் மக்களுக்கான திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தனது முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் டி எம் செல்வகணபதி பொதுமக்கள் இடையே கேட்டுக்கொண்டார். 
இதனைத் தொடர்ந்து கோரிமேடு, சின்ன கொல்லப்பட்டி, பெரிய கொல்லப்பட்டி, சின்ன திருப்பதி, ஜான்சன் பேட்டை மெயின் ரோடு, சங்கர் நகர், சீரங்கம் பாளையம், சின்ன புதூர், நாராயணசாமி தெரு, அரிசி பாளையம், சாமிநாதபுரம், பால் மார்க்கெட், லாரி மார்க்கெட், செவ்வாய்பேட்டை, பூ மார்க்கெட், ஆகிய பகுதிகளின் பிரச்சாரத்தை மேற்கொண்டு முகமது புரா பகுதியில் தனது முதல் நாள் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, திமுக கள்ளக்குறிச்சி பேரூராட்சி செயலாளர் குபேந்திரன், மாநகர செயலாளர் ரகுபதி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் துணை மேயர் சாரதா தேவி சிபிஎம் சேலம் தாலுகா செயலாளர் கே .எஸ்.பழனிசாமி உள்ளிட்டு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் திருவள்ளூர் பங்கேற்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: