வெள்ளி, 15 மார்ச், 2024

ஈரோட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு புதிதாக அமுல்படுத்தியுள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஈரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையில், ஈரோடு, திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜாபர் முன்னிலையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் இந்த சட்டம் சிறுபான்மை மக்களை பாதிப்படையச் செய்யும் என்றும் வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக அரசு இந்த சட்டத்தை திடீரென அமல்படுத்தியுள்ளது என்று இந்த  ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், குடியுரிமைச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல் முன்னிலை வகித்தார்.  வடக்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஈஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன், கோவை மண்டல பொறுப்பாளர் சுசி கலையரசன், மண்டல செயலாளர் வளவன் வாசுதேவன் மேனாள், ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் ஜாப்ர்அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஜெ . பைஜுல் அகமது, 
வி.விஜயபாலன்,கொடுமுடி பழனிச்சாமி, அக்பர் அலி, ஆல்ட்ரின், பால்ராஜ்,அம்ஜத் கான் பொன்னரசு, மதிவாணன் , குணவளவன், சண்முகம், ஆனந்தன், தங்கமணி மேகலை,அந்தியூர் தீபா, சித்ரா, தமிழ் செல்வி, சரவணன், பொன்னையன், எலைட் குப்புசாமி, சந்திரகுமார், சித்திக் ,நந்தகுமார், சரண் ,ரேவந்த், பூபதி, அந்தியூர் தங்கராஜ், கிருஷ்ணன், லெனின்கதிரவன், இளையராஜா , ரஞ்சித் , சதீஷ் வளவன் ரகுநாதன்,சண்முகம்,
அரசங்கம்,ஆதிவாளவன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: