வெள்ளி, 22 மார்ச், 2024

ஈரோடு தொகுதியில் விஜயகுமார் போட்டி - தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஜயகுமார் (வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஈரோடு மக்களவைத் தொகுதியில்  போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பி.விஜயகுமாரின் சுய விபரம்

பி.விஜயகுமார் ( 55 ),
த/பெ பொங்கியண்ண கவுண்டர்,

விலாசம் : பயணியர் எஸ்டேட், லட்சுமி நகர், 
மேட்டு நாசுவம்பாளையம்,
ஈரோடு.

பிறந்த தேதி : 20.11.1969 

கல்வி : ஈரோடு மாவட்டம்  பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு நிறைவு செய்தார்.
தாராபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

குடும்ப விவரம்:-

இவர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர் ஆவார். இவருக்கு சுமதி 51 மனைவியும், விஜய் சூர்யா என்ற மகனும் லாஷிகா ப்ரீத்தி மகளும் உள்ளனர்.

தொழில்: ரியல் எஸ்டேட் & விவசாயம்.

இவர் கட்சியில் வகித்த பொறுப்புகள்:-

2010 இல் இருந்து 2012 வரை ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணியின் மாவட்ட தலைவராக பணியாற்றியுள்ளார்.

2013 முதல் 2015 வரை காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியின் மாவட்ட தலைவராக தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பிரியும் வரை மாவட்ட தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவராக பணியாற்றி வருகிறார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: