புதன், 10 ஏப்ரல், 2024

ஈரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உள்ளது. பகலில் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி மாலையில் இப்தார் உணவுடன் நோன்பை துறப்பது வழக்கம். சூரியன் மறையும் வரை இவர்கள் நோன்பை கடைப்பிடிப்பார்கள். நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் மார்ச் 12ம் தேதி தான் பிறை தெரிந்தது. இதனால் தான் ரமலான் மாதம் அன்று தொடங்கப்பட்டது. சுமார் 30 நாட்கள் விரதமிருந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று (மார்ச் 10ம் தேதி) பிறை தெரிந்தால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தமிழகம், புதுவையில் இன்று (ஏப்ரல் 10ம் தேதி) பிறை தெரியாததால் நாளை (ஏப்ரல் 11ம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்து இருந்தார்.

ஆனால், தமிழகத்தில் பிறை தென்பட்டதாகவும் ரம்ஜான் பண்டிகை இன்று (ஏப்ரல் 10ம் தேதி) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே பிறை தென்படவில்லை என்று அறிவிப்பு செய்திருந்தோம். இந்த நிலையில் கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக செய்தி வந்தது. அதை சற்று முன் விசாரித்து உண்மை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், ரம்ஜான் பண்டிகை இன்று ( ஏப்ரல் 10ம் தேதி) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெருநாள் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் முழுமைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. ஈரோடு, பெரியார் நகர் பகுதியில் உள்ள சமீம் திடலில் நடைபெற்ற ரமலான் பெருநாள் தொழுகையில் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பேச்சாளர் அப்தூர் ரகுமான் தலைமை ஏற்று தொழுகையை நடத்தி வைத்தார்.

இந்த தொழுகையில், கிளை தலைவர் முகமது இஸ்மாயில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பின்னர் தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் தங்கள் உறவுகளையும் நண்பர்களையும் ஆரத்தழுவி ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: