ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.......

*தேர்தல் சமயத்தில் அதிமுகவினர் மீது வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும்.*

*அம்பேத்கார் மக்கள் இயக்கம் கோரிக்கை.*

 நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நாடெங்கிலும் வேட்பாளர்களும் கூட்டணி கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்ற இவ் வேளையில். சேலத்தில் அதிமுகவின் முன்னணி பொறுப்பாளர்கள் மீதும் அதிமுக வெற்றிக்காக அயராது பாடுபடும் அதிமுகவினர் மீதும் சேலம் மாநகர காவல் துறை குற்றவியல் நடைமுறைச் சட்டம் சிஆர்பிசி 110 சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்திற்கு வருமாறு நிர்வாகிகளை போன் செய்து அழைப்பதும் தொடர்ந்து அதிமுகவினரின் வீடுகளுக்கு சென்று காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பதும் காவல் நிலையத்திற்கு வந்து எழுதி கொடுத்து விட்டு செல்லுங்கள் என சொல்வதும், நாடாளுமன்ற தேர்தல் முடிவு வரை வெளியூருக்கு சென்று விடுங்கள் என அச்சுறுத்துவதும் ஏற்புடையதல்ல. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீதும்,தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், தொடர்ந்து ரவுடித்தனத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் பயன்படுத்தப்படுகின்ற குற்றவியல் நடைமுறைச் சட்டம் சிஆர்பிசி 110 சட்ட பிரிவை தவறாக சேலம் மாநகர காவல் துறை அதிமுகவினர்  மீது பயன்படுத்துகிறது. இது போன்ற செயல் ஆளும் கட்சியான  திமுகவுக்கு ஆதரவாகவும் அதிமுகவினரின் குரல்வளையை  நெறிப்பதாகவும் உள்ளது.மேலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறக் கூடாது என ஆளுங்கட்சியினருக்கு சேலம் மாநகர காவல் துறை ஆதரவாக செயல்படுகிறதா என சந்தேகம் எழுகிறது. காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் மாநகர காவல் துறையை வலியுறுத்துகிறோம்.
இந்த விஷயத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களும், சேலம் மாவட்ட தேர்தல் மேலிட அதிகாரிகளும், தமிழக தலைமை  தேர்தல் ஆணையரும் இது குறித்து உரிய விசாரணை செய்து அதிமுகவினர் மீது அச்சுறுத்துகின்ற அச்சுறுத்தலில் இருந்தும் அவர்கள் மீது பொய் வழக்கு போடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சுதந்திரமாக தேர்தல் பணியை அதிமுகவினர் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும், சேலம் மாவட்ட நிர்வாகத்தையும் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: