செவ்வாய், 9 ஏப்ரல், 2024

தமிழகத்திற்கு மோடி வரும்போது கூட்டம் கூடுவது வட இந்தியர்கள் தான்: ஈரோட்டில் சீமான் பேச்சு

தமிழகத்திற்கு பிரதமர் வரும்போது கூட்டம் கூடுவது வட இந்தியர்கள் தான் என்று ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்மேகனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ் பேரின மக்களிடையே தொடர்ந்து அநீதிகளை முறையற்ற நிர்வாகம்,ஊழல் லஞ்சம், இயற்கை வளங்கள் சுரண்டல் ஆகியவை சுரண்டப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக, இதனை என் மக்கள் சகித்துக் கொண்டு போர் குணமற்ற போனார்கள். இதனால் அடிமை இனம் உருவாகி வருகிறது. இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நடக்கும் அநியாயங்களை அக்கிரமத்தை சகிக்க முடியாமல் எளிய பிள்ளைகள் எதிர்க்க துணிந்து நிற்கிறோம். உண்மையின் நேர்மை எங்கே இருக்கிறதோ அங்கே போய் சேரலாம் அங்கு கூட்டணி வைக்கலாம்.

லஞ்சம் ஊழல் ஒழிக்க வேண்டும் என்று சொல்லும், மக்களால் தான் தனித்து நிற்கிறோம் அதனால் கூட்டணி வைக்கவில்லை ஊழல் லஞ்சம் ஒழிப்பது முன்பு இவர்கள் சிந்தனையில் உள்ள லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும். தெரு தெருவாக நாம் தமிழர் வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால் மற்ற கட்சிகள் இரண்டு நாளில் தேர்தலுக்கு முன்பு வீடு வீட்டுக்கு சென்று வாக்குக்கு காசு கொடுக்கிறார்கள். இதனை மக்கள் புறக்கணிக்கும் போது தான் 5 ஆண்டில் நிரந்தர பசியை போக்க முடியும். 

படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் அரசு வேலை. விவசாய காய்கறி வளர்ப்பில் பூச்சிக்கொல்லி தெளித்து தேனீக்கள் வளர்ப்பு அழிக்கப்படுகிறது. ஒவ்வொரு பூச்சும் ஒவ்வொரு பயனை தருகிறது. பட்டு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன் பிடிப்பு போன்ற வேளாண்மை பணிகள் அரசு பணிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை சும்மா இருக்க தான் காசு இந்தியாவில் 28 சதவீதம் பேர் இரவு உணவு இல்லாமல் தூங்க செல்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி கொள்கைகள் சொல்வதை கேரள அரசு பின்பற்றி வருகிறது. மனித உடல் திறனை உற்பத்தியில் முழுமையாக ஈடுபடுத்தும் நாடு தான் வளரும். தீரன் சின்னமலை உலகில் மிகப்பெரிய புரட்சியாளராக திகழ்ந்தவர். தீரன் சின்னமலை ஒரு எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் மன்னர் வழியில் வந்தவர் இல்லை. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்பதற்கு காசு கொடுத்து மக்கள் கூட்டம் வரவழைக்கப்பட்டு வருகிறது.

3வது அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சிக்கு வந்தது. மக்களாகிய உங்கள் ஆதரவு தான் நான் பேசியதும் ஓடாநிலை பகுதியை ஆண்ட தீரன் சின்னமலை கொள்கை தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தான் இருந்தது‌. எதற்கு பாஜக வாக்களிக்க வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லுங்கள் பார்ப்போம். தமிழ்நாடு என்று தான் பெயர் உள்ளது. ஆனால் தமிழர்களுக்கும் தமிழ்க்கும் இது சுடுகாடு. விவசாய தொழிலில் வட இந்திய தொழிலாளர்கள் வேலை கிடைப்பார்கள் என்று பலகை வைக்கப்பட்டுள்ளது. உழைப்பு விட்டு வெளியேறியதால் வட இந்தியர்கள் உள்ளே வந்து விட்டார்கள். நாம் தமிழ் கட்சி வந்தால் இதற்கு காரணமான மது கடைகள் மூடி திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ் நிலம் பறிபோய் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர்கள் வேலை செய்வது வாழ்வது தவறு இல்லை. ஆனால் குடியுரிமை வழங்குவதை தான் எதிர்க்கிறோம். இந்தி மொழி பேசும் மற்றொரு மொழியாக மாறா விடக்கூடாது என்று தான் எதிர்க்கிறோம். காங்கிரஸ், பாஜக அதிமுக திமுக ஆகிய கட்சிகள் தான் மக்கள் கஷ்டப்படும் நிலைமை உள்ளது. மாற்று என்று தேடிக்கொண்டு மட்டுமே மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மாற்றத்தை முழுமையாக தேடுவதில்லை.

அதிலும் அதிமுக, மாற்று திமுக, காங்கிரஸ், மாற்று பாஜக என்று மட்டுமே மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியே இருந்தால் மக்கள் வாழ்க்கை நிலை இப்படி தான் இருக்கும் மாற்ற முடியாது. தமிழகத்தில் 99 சதவீதம் குற்றம் மது போதையில் தான் நடக்கின்றது. ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போது குஜராத்தில் அதானி துறைமுகத்தில் 1லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பிடிப்பட்டது என்ன செய்தீர்கள். ஏன் ஜாபர் சாதிக் அமீர் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கிறது. ஏன் என்றால் அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் நடவடிக்கை எடுக்கிறது. ஏன் மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை நேர்மையானவர்களாக இருந்தால் அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும்.

பாஜக எங்கெல்லாம் அமலாக்கத்துறை மூலம் சோதனை செய்தததோ அங்கெல்லாம் பாஜக பணம் வாங்கி உள்ளது. லட்டாரி மார்டின், புல்வாமா தாக்குதல் பிறகு பாஜக பாகிஸ்தானில் பணம் வாங்கி உள்ளது பாஜக. உலகத்தில் மாட்டுக்கறி 24 லட்சம் டன் எடை வரை இந்தியா முஸ்லீம் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. பாரத மாதாவுக்கு ஜே போட்டால் தேச பற்று ஜெய் ஸ்ரீ ராமருக்கு எதற்காக கோஷம் போட வேண்டும். எதற்கு கடவுளை கட்சி கோஷமாக மாற்றியது ஏன்?. மதம் சாதி கடவுளை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்கள் நலனை பற்றி சிந்திப்பவனுக்கு மதம் கடவுள் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது சிந்திக்க மாட்டான். 

தேர்தலுக்காக ராமர் கோவில் அவசர கதியில் திறக்கப்பட்டது. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல்‌ 200 பொருட்கள் மீது ஜிஎஸ்டி மீதான வரி குறைப்பு தேர்தல்.‌ 1976ம் ஆண்டு காலத்தில் கொடுக்கப்பட்ட கச்சத்தீவு மீட்பது இப்போது சொல்வது தேர்தல் அரசியல். அண்ணாமலை முன்னிறுத்தி பாஜக தமிழகத்தில் தேர்தல் சந்திப்பதால் கச்சத்தீவு விவகாரம் அண்ணாமலை மூலம் பாஜக பேசுவது தேர்தல் அரசியல். தேசியத்தின் உரிமை பிரச்சினையான கச்சத்தீவு பிரச்சினை குறித்து இத்தனை ஆண்டு பிறகு தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்து கொண்டேன் என பிரதமர் சொல்வது கேவலமான விஷயம் ஒன்று.

இனி ஓட்டுகளை பறிக்க பிரதமர் நரேந்திர மோடி ஓயாமல் வருவார். வாக்கு இயந்திரத்தில் எங்கே அழுத்தினாலும் பாஜக சின்னத்திற்கு விழும் வகையில் உள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உள்ளது. இமயம் வரை பரவி வாழ்ந்த தமிழ் இனத்தின் மீது பண்பாட்டு படை எடுப்பு நடக்கின்றது. மக்கள் பிழைத்து கொள்ள வேண்டும். குலதெய்வ கோவிலில் கூட தமிழில் மந்திரம் சொல்வது போய் சமஸ்கிருத மொழி வந்து விட்டது. அடுத்தவர் மொழி நமக்கு அறிவு ஆகாது என்று உணர வேண்டும்.

நான் மட்டும் சிவப்பாக இருந்து இருந்தால் நான் தான் பிரதமராக இருப்பேன். சமூகத்தினை சீர்படுத்த தன்னலமற்ற சர்வாதிகார ஆட்சி முறை கொண்டு வரவேண்டும். தமிழ் தேசத்தில் தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் ஒரே ஒருமுறை மைக் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தமிழகத்தில் பாஜக வட இந்தியர்களுக்கு உறுதுணையாக இருப்பது ஓட்டு அரசியல் தான் தமிழகத்தில் பிரதமர் வரும்போது எல்லாம் கூட்டம் கூடுவது வட இந்தியர்கள் தான் என்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: