புதன், 17 ஜூலை, 2024

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு 100 வயது வரை கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

ஓய்வூதியர்களுக்கு 100 வயது வரை கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம். 

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட பேரவை கூட்டம் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் உள்ள அண்ணன் தம்பி நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியம் சங்கத்தின் மாநில செயலாளர் ஜெபமாலை மேரி மற்றும் மாநில பொருளாளர் வேலாயுதம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 
சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட பேரவை கூட்டத்தில், சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. 
கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளருமான சரசுராம் ரவி உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு துரை சார்ந்த விளக்கங்களை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாசிச  சக்திகளை வீழ்த்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்கள் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டு 40க்கு 40 என்ற எண்ணில் வெற்றி பெற்று இந்திய கூட்டணியை பலம் வாய்ந்த ஒன்றாக மாற்றி அமைக்க இந்த பேரவை கூட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது, மத்திய அரசுக்கு தனது ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும்  1.1.2004 முதல் அகவிலைப் படியினை 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. இதனை ஒட்டி மாநில அரசும் அகவிலை படி உயர்வு அளித்துள்ளதை வரவேற்கிறோம். இருப்பினும் ஒன்றிய அரசு அளித்து வந்த அகவிலைப்படி உயர்வினை ஆறு மாதம் மூன்று மாதம் தள்ளி மாநில அரசு அளித்து வந்துள்ளது. அதாவது அகவிலைப்படி உயர்வினை 1.7.2002, 1.1.2023, மற்றும் 1.4.2023 முதல் அனுமதித்து ஆணை வழங்கியிருப்பது 21 மாத அகவிலை படி ஏற்பட்டுள்ளது இதனை மறுபரிசீலனை செய்து மத்திய அரசு அளித்த தேதியிலேயே பழைய அகவிலைப்படி உயர்வையும் அளிக்க வேண்டும், தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தவாறு ஓய்வூதியர்களுக்கு 70 வயது முடிந்தவர்களுக்கு 10%, 80 வயது முடிந்தவர்களுக்கு 20%, 85 வயது முடிந்தவர்களுக்கு 30 சதவிகிதமும் அமலில் உள்ள ஆணைகளின் படி 90, 95 மற்றும் நூறு வயது வரை கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டுகிறோம், அதேபோல ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத் தொகையினை விளைவில் தமிழக அரசு வழங்க வேண்டும் மற்றும் தமிழக முதல்வர் தங்களது 2006 2011 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கைகளில் உறுதி அளித்தவாறு புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்ந்து அனைவருக்கும் அமல்படுத்த வேண்டுகிறோம். தமிழக முதலமைச்சர் அவர்கள் இல்லத்தை நோக்கி சிபிஎஸ் ஒலிப்பு இயக்கம் நடத்திய சாத்வீக போராட்டத்தை போராட்ட ஊழியர்களை தமிழ்நாடு காவல்துறை தேவையற்ற வீட்டுக்காவல் கைது போன்ற மிரட்டல்களை வெடித்தது கண்டு மாவட்ட பேரவை தனது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறது என்பன உள்ளிட்ட 27 கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இந்த பேரவை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜசேகரன் சிவானந்தம் ராஜரத்தினம் உமாதேவி வைத்தியலிங்கம் செல்லமுத்து கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: