வெள்ளி, 26 ஜூலை, 2024

கால்நடை மருத்துவ ஆம்புலன்சில் பணி: ஈரோட்டில் நாளை (27ம் தேதி) நேர்காணல்

இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளதாவது:- 

தமிழ்நாடு அரசின் 1962 இலவச கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் திட்டம், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரை காக்கும் நோக்கத்தோடு 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களிலும் கூட, 1962 எனும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், மருத்துவ வசதி தேவைப்படும் இடத்திற்கே கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நாளை (27ம் தேதி) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் நடக்கிறது.

டிரைவருக்கான தகுதிகள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 24 முதல், 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம், 162.5 செ.மீ., ஓட்டுநர் உரிமம் பெற்று, 3 ஆண்டுகளும் பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான சம்பளம் ரூ.12,000 ஆகும்.

ஆம்புலன்ஸ் உதவியாளர் பணிக்கான தகுதிகள், 12ம் வகுப்பு தேர்ச்சி, வயது, 19 முதல், 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம் ரூ.1,3000 ஆகும். நேர்முக தேர்வுக்கு வரும் அனைவரும், அசல் சான்றிதழை மற்றும் ஓட்டுநர் உரிமம் அவசியம் எடுத்து வரவேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: