ஞாயிறு, 21 ஜூலை, 2024

#EXCLSIVE சேலத்தில் தலை வெட்டி முனியப்பனாக கருதப்படும் புத்தர் சிலை முன்பு பௌத்த அமைப்பினர் காவல் துறை பாதுகாப்புடன் பௌர்ணமி சிறப்பு தியானம்

சேலம். 
S.K.சுரேஷ் பாபு

EXCLUSIVE EXCLUSIVE EXCLUSIVE
சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தலை வெட்டி முனியப்பன்  கோவிலில் உள்ள புத்தருக்கு காவல்துறை பாதுகாப்புடன் தியானத்தில் ஈடுபட்ட புத்த அமைப்பினர்... தலை வெட்டி முனியப்பன் கோவில் என்று உள்ள பெயர் பலகையை அகற்றிவிட்டு புத்த விகார் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி தமிழக அரசுக்கு வேண்டுகோள். 

சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே தலைவெட்டி முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த கோயில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இந்த கோவிலில் உள்ள மூலவரின் சிலை புத்தராக இருந்ததாகவும், அதன் பின்னர் தலை வெட்டி முனியப்பனாக மாற்றப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக அப்போதைய தமிழக முதல்வரிடம் புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாததால் சேலத்தில் உள்ள புத்த அமைப்பினர் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து தொல்லியல் துறை சார்பில் விரிவான ஆய்வறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில் கோவிலானது சிறப்பு தோற்றத்தில் உள்ளது என்றும் ஆனால் கோவிலில் உள்ள மூலவர் கடுமையான கல்லால் செதுக்கப்பட்டு தாமரை மலர் மீது அமர்ந்து பத்மாசன நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் சிலையின் கையில் தியான முத்திரைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆகையால் புத்தரின் அடையாளங்கள் தலைப்பகுதியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணையின் முடிவில் உயர்நீதிமன்றம் மேற்கண்ட சேர்ப்போம் புத்தருடையது தான் என்றும் தலை வெட்டி முனியப்பன் கோவில் அல்ல என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. 
மேற்கண்ட புத்தர் சிலை சம்பந்தமாக அதன் முந்தைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இந்தக் கோவில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இது புத்தர் கோவில் தான் என்று பலகை வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வந்து பார்வையிடலாம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. பௌர்ணமி நாளன்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் புத்தருடைய சன்னிதானத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். 
அதன் அடிப்படையில், ஏற்கனவே சேலம் புத்தா டிரஸ்ட் அமைப்பின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகத்திடம் சேலம் கோட்டை மைதானம் பகுதியில் அமைந்துள்ள தலை வெட்டி முனியப்பன் என்கின்ற புத்தர் கோவிலில் பௌர்ணமி தினத்தன்று உத்தமத்தை சார்ந்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டதன் அடிப்படையில், காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை தியானம் செய்து கொள்ளலாம் என்று மனு தாக்கல் செய்த ராம்ஜி என்பவருக்கு சேலம் சிறுபான்மை நலத்துறை அலுவலரும் சேலம் மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்ததோடு, புத்தா  அமைப்பினர் வழிபாடு நடத்தும் போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த எழுத்துப்பூர்வ கடிதத்தில் கடந்த 18ஆம் தேதி குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்று என்று சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி மற்றும் அவரது அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பௌர்ணமி நாளான இன்று புத்தருக்கு மரியாதை செய்து தியானம் செய்ய தலைவெட்டி முனியப்பன் கோவிலுக்கு வந்தனர்.
அப்பொழுது, கோவிலில் இருந்து பூசாரியிடம் தங்கள் வந்த நோக்கத்தை தெரிவித்தவுடன் பூசாரியே விலகிக் கொண்டு வந்த புத்த அமைப்பை சார்ந்தவர்களுக்கு அனுமதி அளித்தார், இதன் எடுத்து மூலஸ்தானத்திற்கு சென்ற ராம்ஜி உள்ளிட்ட குத்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தலைவெட்டி முனியப்பனாக கருதப்படும் சிலையில் இருந்து அலங்காரத்தை முழுமையாக அழித்துவிட்டு அவர்கள் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்கின்ற தகவலைக் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளருக்கும் புத்த அமைப்பை சேர்ந்த ராம்ஜிக்கும் இடையே மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை எடுத்து காவல் துறை ஆய்வாளரும், எழுத்துப்பூர்வ கடிதத்துடன் வந்திருந்து புத்த அமைப்பைச் சார்ந்த ராம்ஜியும், சம்பந்தப்பட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலர்களிடம் பேசியதன் அடிப்படையில், இருதரப்பினரையே சமரசம் ஏற்பட்டு காவல் துறையினரின் வழிகாட்டுதலின்படி, 

சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி அவர்கள் தலைமையில் புத்த ராஜா, மான் அம்பேத்கர், போதிதர்மன் மற்றும் சீவகன் உள்ளிட்டோர் அங்கிருந்த புத்தர் சிலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர்களை வைத்தும் சிறப்பு தியானத்தில் ஈடுபட்டதோடு புத்தம் சரணம் கச்சாமி என்ற சரண கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். 
 இதுகுறித்து சேலம் புத்தா டிரஸ் தலைவர் ராம்ஜி நம்மிடையே கூறுகையில், இந்தக் கோவிலில் உள்ளது தலை வெட்டி முனியப்பனா அல்லது புத்தர் சிலையா என்ற சர்ச்சைக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இது புத்தர் சிலை தான் என்று தீர்ப்பு வழங்கிய பிறகும் தற்பொழுது வரை இங்கு இந்து முறைப்படி தலை வெட்டி முனியப்பனாக இங்கு வழிபாடு நடத்தப்பட்டு வருவதாகவும், தற்பொழுது தங்களுக்கு கிடைத்துள்ள எழுத்து மூல உத்தரவின் அடிப்படையில் இந்து முறைப்படி இந்த கலாச்சாரத்தை நீக்கிவிட்டு புத்த முறைப்படி தியானம் செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் வழங்கிய எழுத்துப்பூர்வ உத்தரவுப்படி ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தொடர்ந்து வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்த ராம்ஜி இந்த கோவில் முன்புறமாக அமைக்கப்பட்டுள்ளது தலை வெட்டி முனியப்பன் கோவில் என்று தகவல் பலகையை அகற்றிவிட்டு புத்த விகார் என்று பெயர் பலகையை வைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆடி மாத திருவிழாவின் போது இந்த கோவிலில் நடைபெற உள்ள திருவிழாவை இந்த கோவிலில் நடத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கும் தொல்லியல் துறைக்கும் கோரிக்கை விடுத்த அவர், தமிழக அரசும் தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்கும் தவறும் பட்சத்தில் சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ளே அனைத்து புத்த மதத்தினரையும் ஒன்றிணைந்து சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று எச்சரிக்கை விடுத்த அவர், இனி ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் இந்த கோவிலுக்கு வரும்போது எந்த விதமான தடையும் இன்றி அவர்கள் தியானம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் இதற்கு தமிழக அரசும் தொல்லியல் துறையும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: