சனி, 27 ஜூலை, 2024

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (27ம் தேதி) தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஈரோடு காளை மாட்டு சிலை, ஓட்டல் சிம்னி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் தலைமை தாங்கினார்.


ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், திமுக விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி, தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். இதில், மத்திய பட்ஜெட்டில் திமுக புறக்கணிக்கப்பட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்பிக்கள் கந்தசாமி, என்.ஆர்.கோவிந்தராஜ், முன்னாள் மேயர் குமார் முருகேஷ், தெற்கு மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாநில மாணவரணி இணைச் செயலாளர் வீரமணி, தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், ஈரோடு மாநகர் பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு, ராமச்சந்திரன், வில்லரசம்பட்டி முருகேஷ், கோபி நகர மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், பவானி நகர மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி மற்றும் நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், கொள்கைப் பரப்பு செயலாளர் சந்திரகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி உள்பட 2000 பேர் கலந்து கொண்டனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: