புதன், 24 ஜூலை, 2024

மத்திய பட்ஜெட்: கண்துடைப்பு பட்ஜெட் முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஷா

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு முக்கியதுவம் அளிக்காத வெறும் கணிதுடைப்பு பட்ஜெட் ஆக உள்ளது என்று முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.என்.பாஷா தெரிவித்துள்ளார்.
முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவருமான கே.என்.பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு லிங்க் எக்ஸ்பிரஸ் நாகர்கோயில் எக்ஸ்பிரஸில் இணைப்பு ரயிலாக லிங்க் எக்ஸ்பிரஸ் இயங்கி கொண்டு இருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நாள்கு ஆண்டுகளாக இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இல்லாமல் தென் மாவட்ட பயணிகள் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டி தருவது ஈரோடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு ரயில் நிலையத்தில் நான்கு பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளது. நாள் ஒன்றுக்கு 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால் போதிய இடவசதி இல்லாமல் ரயில்கள் ஜங்ஷன் தூரத்தில் நிறுத்தி காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே 5வது பிளாட்பாரமும், நான்காவது பிளாட்பாரத்தில் பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கி செல்ல நடவடிக்கை வரும் என்று எதிர்பார்த்தோம்.

கன்னியாகுமரி - மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி கொண்டு இருக்கிறது. இது கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. கொரனா பெருந்தொற்று காரணமாக இந்த ரயில் புனே வரையில் இயக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ரயில் புனே வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் மும்பை வரை நீட்டிப்பு செய்தி வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே?

கொரோனா பெருத்தொற்று காரணமாக காரைக்கால் - எர்ணாகுளம், கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோவில், கடலூர் துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கொடுமுடியில் நிறுத்தாமல் தொடர்ந்து வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது குறித்து கொடுமுடி ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் செய்தோம் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை?.

கோவையிலிருந்து காலை 7.25 மணிக்கு மேல் சென்னை செல்ல மதியம் 12.00 மணிக்கு தான் சென்னை செல்ல ரயில்கள் உள்ளது. காலை 9.00 அல்லது 10.00 மணிக்கு பகல் நேர இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயங்கினால் திருப்பூர், ஈரோடு, சேலம் பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் புதிய ரயில் அறிவிப்பு இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

கோவையிலிருந்து காலை திருப்பதிக்கு இவர்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதை தினசரி ரயிலாக இயக்குனால் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கும், பயணிகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

நாடு முழுவதும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியும, அவசியமாக உள்ளது. அப்படி அறிமுகப்படுத்த பட்டது தான் சுவாச் (கவசம்) தொழில் நுட்பம். இது ஒரு தானியங்கி (ரயில் பாதுகாப்பு) முறையாகும். ஓட்டுனர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் குறிப்பாக ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கை செய்யும், அப்போது ஓட்டுனர் வேகத்தை குறைக்க தவறினால் இந்த கருவி தானாகவே ஆட்டோமேட்டிக் (பிரேக் அப்ளை) ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக் குள்ளான சாத்தியத்தை குறைக்கும் இந்த வசதி இருந்தால் ரயில் தொடர் விபத்தை தடுக்க ஏதுவாக இருக்கும் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆகவே இந்த முறையை அவசியம் பயன்படுத்தினால் விபத்துக்களை தவிர்க்க எதுவாக இருக்கும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: