செவ்வாய், 23 ஜூலை, 2024

ஆடி திருவிழாவையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் டன் கணக்கில் அம்மனுக்கு பூவாபிஷேகம்.... இரட்சகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ
கோட்டை பெரிய  மாரியம்மன் திருக்கோவிலில் பூச்சாட்டுதல் விழா......லட்சக்கணக்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்...

சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். மேலும் சேலத்தில் எட்டு பேட்டைகளையும் கட்டியாளும் அம்மனாகவும், நவகிரக நாயகியாகவும் வீற்றிருக்கும்  கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திகழ்கிறது.  இந்நிலையில் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று இரவு பூச்சாட்டுதல் விழா வெகு விமரிசையாக  நடைபெற்றது.
விழாவையொட்டி உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கிச்சிப்பாளையம் பஜனை மடம் வீதியில் சோழிய வேளாளர் அறக்கட்டளை சார்பாக  தொடங்கிய பூக்கூடை ஊர்வலத்தில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் சன்னியாசிக்குண்டு மெயின்ரோடு, கல்லாங்குத்து மெயின்ரோடு, டவுன் போலீஸ் நிலையம் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் உற்சவர் மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நநடைபெற்றது.
தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பூச்சாட்டுதல் விழாவில், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, மற்றும் அறங்காவலர்கள்  கலந்து கொண்டனர். மேலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் உற்சவத்தை தொடர்ந்து சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில், தாதகாப்பட்டி கேட் சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், சின்னக்கடை வீதி சின்னமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன் உள்பட 8 பேட்டை மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டுதல் உற்சவத்துடன் ஆடிப்பண்டிகை இன்று தொடங்கியது.
கோட்டை மாரியம்மன் கோவிலில் வருகிற 5-ம் தேதி சக்தி அழைப்பும், 7,8 மற்றும் 9-ம் தேதிகளில் பொங்கல் வைத்து பக்தர்கள் உருளு கண்டம் இடும் வழிபடு நிகழ்ச்சியும், 11-ம் தேதி சத்தாபரணி நிகழ்ச்சியும், 13-ம் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவையும், விழாவின் நிறைவாக வரும் 16-ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் விளையாடி உற்சவத்துடன் ஆடித்திருவிழா இனிதே நிறைவடைய உள்ளது நடைபெறுகிறது. மேலும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் பூஜைகள் தீபாரதணைகள் நடைபெற இருக்கிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: