புதன், 17 ஜூலை, 2024

தலித் இன தலைவர்கள் படுகொலை உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தவரும் பட்சத்தில் தமிழக காவல்துறைக்கு சரியான பாடம் புகட்டப்படும். சேலத்தில் நடைபெற்ற ILU மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நல சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு..

சேலம். 
S.K.சுரேஷ் பாபு.

சென்னை ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்காத பட்சத்தில் தமிழக அரசுக்கு பாடம் புகட்டப்படும்.... சேலத்தில் நடைபெற்ற ILU மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு. 

சேலத்தில் தேசிய சுதந்திர தொழிலாளர்கள் சங்கத்தின் இணைப்பு சங்கமான தமிழ்நாடு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள இலக்குமி அருகில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் ராம்ஜி தலைமையில் நடைபெற்றது, இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய சுதந்திர தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் முனைவர் செல்வ. செல்வகுமார் மற்றும் தேசிய சுதந்திர தொழிலாளர்கள் சங்கத்தில் தேசியத் துணைத் தலைவர் முனைவர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், தமிழக முழுவதும் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்து மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். 
குறிப்பாக அமைப்பின் இணைச் செயலாளர் முனைவர் செல்வ. செல்வகுமார் நிகழ்ச்சியில் பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், தமிழகத்தில் தலித் இன மக்கள் தலை எடுக்கக் கூடாது என நினைக்கும் என்னும் தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் அடியோடு மறந்து விட வேண்டும் என்றும், இல்லை என்ற பட்சத்தில் வரும் காலங்களில் அவர்களுக்கு பாடம் புகட்டுவது மட்டுமல்லாமல் தற்சமயம் இந்த சம்பவத்தை முழுமையாக ஆராய்ந்து உண்மை குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் அக்டோபர் 7ஆம் தேதி தங்களது அமைப்பின் சார்பில் மாண்புமிக்க நாளாக கருதப்பட்டு தேசிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் சேலம் அல்லது வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாகவும், அதற்கு தேசிய தலைவர்கள் வரவழைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழக உட்பட  நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தேசிய அளவில் உள்ள பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசித்து மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார். 
தொடர்ந்து தமிழ்நாடு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவனரும் மாநில தலைவருமான ராம்ஜி பேசுகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்திற்கு உரியது என்றும் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யும் அளவிற்கு இயல்பான சூழ்நிலை உருவாக்கிய தமிழக அரசுக்கு வன்மையான கண்டனத்தை பதிவிடுவதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசு காவல்துறையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தவர், தமிழகத்தில் நிகழ்ந்து வரும் தலித் இன  சமுதாய தலைவர்களின் படுகொலைக்கு போராடி வரும் தங்களை போன்ற போராளிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்காத தமிழக காவல்துறையின் ஏகபோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் இல்லையெனில் காவல் துறைக்கு பாடம் கற்பிக்க வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுத்தார். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 
இந்த ஆலோசனை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சுதாகர், துரைமுருகன், முருகேசன், பாண்டியன், அஸ்மத் அலி, நந்தகுமார், மனோகரன், ராஜாமணி, ஜெகராபி என முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: