சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பள்ளிப்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகளில் உள்ள ஜாதி குறியீடுகளை நீக்கி 1,2 மற்றும் 3 என எண்களைக் கொண்டு 9 வார்டுகளுக்கும் பெயர் பலகை அமைத்து தர வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை.
78வது சுதந்திர தினத்தை ஒட்டி சேலம் மாவட்டம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளிப்பட்டி பஞ்சாயத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினார்.
குறிப்பாக பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தர்மன் என்பவர் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்ஜி என்பவரை அணுகிய போது, சமூக ஆர்வலரின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிப்பட்டி கிராம சபை கூட்டத்தில் முகாம் அலுவலர்களிடம் அம்பேத்கர் நகர் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.
அந்த மனுவில், பள்ளிப்பட்டி ஊராட்சியில் வாழும் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர் இதனால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக பொது மக்களுக்கு பொதுக்களிப்பிடம் கட்டித் தரப்பட வேண்டும், பள்ளிப்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகளில் உள்ள ஜாதி குறியீடுகளை நீக்கி 1,2 மற்றும் 3 என எண்களைக் கொண்டு 9 வார்டுகளுக்கும் பெயர் பலகை அமைத்து தர வேண்டும். 20 ஆண்டு காலமாக பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் வரக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்காத காரணத்தினால் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று குடிநீர் பிடிப்பதால் அங்குள்ளவர்கள் சாதி ரீதியான பாகுபாடுகள் காட்டி வருகின்றனர். இது தங்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும் எனவே நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும், பள்ளிப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி வகுப்பறை கட்டிட வசதி விளையாட்டு தளத்துடன் கூடிய பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், பள்ளிப்பட்டி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும், பள்ளிப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த கழிவறை இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. எனவே புதிய கழிவறை கட்டித் தர வேண்டும் மற்றும் செயல் இழந்து காணப்படும் பொது நூலகத்தை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், பள்ளிப்பட்டி ஊராட்சியில் தனி கூட்டுறவு சொசைட்டி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் பயன் பெறும் வகையில் புதிதாக தனி கூட்டுறவு சொசைட்டி அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கி முகம் அலுவலர்களிடம் மனு வழங்கப்பட்டது.
இந்த மனுவினை பெற்றுக் கொண்ட முகாம் அலுவலர்கள் இதனை உடனடியாக ஏற்றுக்கொண்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.
0 coment rios: