சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேற்கு தொகுதியில் தமாகா கட்சிக்கு தீய உறுப்பினர் சேர்க்கை முகாம்...2-வது நாளாகதிரளாக பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களை தமாகா கட்சியில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
நேர்மை தூய்மை வாய்மை என்னும் அரசியல் பாடம் சொல்லித் தந்தவர் ஐயா கர்மவீரர் காமராஜர். ஐயா மூப்பனார் ஆகியோர் வழியில் நின்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா ஜிகே வாசன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
தமிழக அரசியலில் நாம் புதிய அத்தியாயத்தை தொடங்கி நமது இயக்கத்தை முன்னெடுத்து நடத்தும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் கர்மவீரர் காமராஜர் சிலை அருகே இன்றும் நடைபெற்றது.
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா கட்சியின் தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சேலம் மேற்கு மாவட்ட தலைவரிடம் வழங்கினர்.
அவர்களை சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் வாழ்த்தி வரவேற்றார்.
அரசியலில் கண்ணியம் நேர்மை நிர்வாகத்தில் ஊழல் நற்ற தூய்மை என காமராஜர் காலத்து பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர தொடர்ச்சியாக நடைபெற்று வரும்
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி ரகு நந்தகுமார் உட்பட மேற்கு தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: