ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள வறட்சி பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் கலக்கும் பவானி ஆற்றின் உபரிநீரை கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என 3 மாவட்ட மக்கள் சுமார் 60 ஆண்டுகளாக போராடி வந்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2019 டிசம்பர் மாதம் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைகட்டில் இருந்து 1,065 கி.மீ தூரத்துக்கு ராட்சத குழாய் வாயிலாக, நீரை பம்பிங் செய்து எடுத்து சென்று, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் பவானி ஆற்றில் விடும் வகையில் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
தொடர்ந்து , நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடந்து வந்தன. இப்பணிக்கு ரூ.1,961.41 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 17ம் தேதி, பவானியில் உள்ள நீரேற்று நிலையம்-1ல் இத்திட்டத்தை பயன்பாட்டிற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனால், 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு நிறைவேறுகிறது.
0 coment rios: