செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

17.30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 18 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள். தொகுதி மேம்பாட்டு நெடில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் வழங்கினார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

17.30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம்... தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் வழங்கினார். 

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. 2022-2023 நிதி ஆண்டில் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கும், 2023-2024 நிதியாண்டில் 13 இரு சக்கர வாகனங்களுக்கும் மொத்தம் 18 இருசக்கர வாகனங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நெறியில் இருந்து, ஒரு வாகனத்திற்கு 96,011 ரூபாய் என 17,28,198 லட்ச ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, சேலம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளால் இருசக்கர வாகனத்தை இயக்க முடியுமா என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கான வாகனங்கள் வழங்கப்பட்டது. பின்னர் வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், மெதுவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும் என்றும் என்றும் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அறிவுரை வழங்கினார். அப்போது ஒரு மாற்றுத்திறனாளி கடந்த 20 வருடங்களாக மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று இரு சக்கர வாகனங்களுக்கு மனு செய்து, தற்பொழுது வரை கிடைக்க வில்லை என்றும் தாங்கள்தான் எனக்கு இருசக்கர வாகனம் பெற்று தந்தீர்கள் என்று கண்ணீர் மல்க சட்டமன்ற உறுப்பினருக்கு சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி நன்றி தெரிவித்தார். இதற்கு தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து இன்னும் எத்துனை வண்டிகள் வேண்டுமானாலும் தங்களுக்கு பெற்று தருகிறேன் என்று சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியை சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஆசுவாசப்படுத்தினார். 
சேலம் மாநகர் மாவட்ட பாமக தலைவர் கதிர் ராசரத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் சரவண கந்தன், சிட்டி வேல்முருகன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தங்கராஜ் ரத்தினவேல் ஈஸ்வரன் நடராஜ் சிவகுமார் சமயவேல் கலைவாணன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார் ஓடிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இருசக்கர வாகனங்களை பெற்றுக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர் இரா அருளுக்கு தங்களது நன்றினை தெரிவித்து சென்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: