சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
விஷமில்லா வேளாண்மை என்ற தலைப்பில் விவசாய பொருட்கள் விற்பனையாளர்களுக்கான கருத்தரங்கம் சேலத்தை அடுத்துள்ள கந்தாஸ்ரமம் பகுதியில் நடைபெற்றது.
ஜியோலைப் அக்ரி டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஜியோலைப் நிறுவனத்தின் தேசிய விற்பனை மேலாளர் கிரண்சக்ராப்பு, தேசிய வளர்ச்சி மேலாளர் அருண்குமார் ராய் மற்றும் தென் மண்டல மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஜியோலைப் இன் 50 ஆண்டுகள் விவசாய சேவைகள் விவசாயிகள் இடையே 15 ஆம் ஆண்டு வெற்றி கரமாக வரவேற்பு பெற்ற விகர் தயாரிப்பு புதிய தொழில்நுட்பங்கள், விஷமில்லா வேளாண்மை பற்றியும் அதிக ஊட்டச்சத்து மிக்க உணவு பெறுவது எப்படி என்பது பற்றியும் விற்பனையாளர்களிடையே உரையாற்றினர்.
மேலும் கடந்த ஆண்டு சிறப்பாக விற்பனை செய்த விற்பனையாளர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் ஜியோலைப் நிறுவனத்தின் விஷமில்லா தயாரிக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் சிறந்த விற்பனையாளர்களை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் சிறப்பாக விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி விற்பனை மேலாளர், விழுப்புரம் விற்பனை மேலாளர் மற்றும் கேரள விற்பனை மேலாளர் உட்பட தமிழக முழுவதும் இருந்து வந்திருந்து ஜியோலைப் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் பலரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
0 coment rios: