சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் மருத்துவர் சங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபால் ராஜ் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் திட்ட அறிக்கையில் வஞ்சகம் விளைவித்தது, தமிழக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி முன் வைத்த கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தியது, சென்னை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கு நிதி வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள தமிழ்நாடு ரயில்வே திட்ட பணிகளுக்கு உடனடியாக நீதி ஒதுக்க வேண்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் நீட் தேர்வு மோசடி நிதிநிலை அறிக்கையில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட துணை செயலாளர் கந்தம்பட்டி குமார், மாநில கலைத்துறை துணை செயலாளர் சுப்பிரமணியன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் நடேசன், மாநகர செயலாளர் அருள் மாது மற்றும் கிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் வைகோ பாபு உட்பட முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: