S.K. சுரேஷ்பாபு.
78வது சுதந்திர தின விழாவை ஒட்டி நெய்க்காரப்பட்டி கோடி காடு பகுதியில் கிராம சபை கூட்டம்... அங்குள்ள கொட்டனத்தான் ஏரி தூர்வாரி சுத்தம் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கேள்வி எழுப்பிய வரை திமுகவை சார்ந்தவரா தாங்கள் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது கிராம சபை கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் இன்று நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்க்காரப்பட்டி ஊராட்சியின் சார்பில் கொண்டலாம்பட்டி அடுத்துள்ள கோடிக்காடு ஏரிக்கரை காளியம்மன் கோவில் திடலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
நெய்க்காரப்பட்டி ஊராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த பெருமாள் என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் சேலம் தெற்கு வட்டாட்சியர் உட்பட அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது அடிப்படை தேவைகள் குறித்தும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அப்பொழுது நெய் காரப்பட்டி கோடிக் காடு பகுதியில் உள்ள கொட்டனத்தான் ஏரியில், கழிவு நீர் புகுந்து ஏரி முழுக்க மாசடைந்துள்ளதோடு சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளில் நீர் மாசடைந்துள்ளதால் அந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு நோய்த்தொற்று மற்றும் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் இடம் பலமுறை கோரிக்கை கொடுத்தும் தற்பொழுது வரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என நெய்க்காரப்பட்டி மக்கள் நல சங்க உறுப்பினர்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கையை முன்வைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவை சேர்ந்து நெய்க்காரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் பிரச்சனையை எழுப்பிய இளைஞர்களை பார்த்து இந்த பகுதியைச் சேர்ந்தவரா அல்லது திமுகவைச் சார்ந்தவரா ? என கோரிக்கைகள் குறித்து பேசாமல் கண்மூடித்தனமாக விவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் உன்னை நான் இந்த பகுதியில் பார்த்ததே கிடையாது யார் நீ என்று கேட்ட நெய்க்காரப்பட்டி ஊராட்சி மன்ற அதிமுகவைச் சேர்ந்த தலைவரிடம், நான் இந்த பகுதியை சேர்ந்தவன் தான் என்றும் என்னிடம் ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது காண்பிக்கவா என்று கேட்டதால், கிராமசபை கூட்டத்தில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை குறித்து பேசப்படாமலேயே கிராம சபை கூட்டம் முடிவுக்கு வந்தது.
0 coment rios: