சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஜெயில் சிங்கர் போட்டி நடத்தி பரிசு பாராட்டு வழங்கி உற்சாகப்படுத்திய சுதந்திர தின விழா. வனவாசம் சிறைவாசம் என்றாலே நினைத்துக் கூட மாற்ற முடியாத அனுபவங்களையும் பல பாடங்களையும் கற்றுத்தரும் இடமாக இருந்து வந்தது
ஏதோ ஆத்திரத்தில் அவசரத்தில் கோபத்தில் செய்த தவறுகளுக்காக வாழ்நாள் முழுவதும் தங்கள் ஆயுள் நாட்களை கழிக்கும் சிறைவாசிகளுக்கு தமிழக அரசு அவர்களை மேம்படுத்த பல்வேறு வகையான புத்துணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொலைநோக்கு திட்டத்தில் கணினி பயிற்சி தொலைதூரக் கல்வி இயக்கம் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அழகு கலை பயிற்சி என சிறைக்கு வெளியே கிடைக்கும். அத்தனை வசதி வாய்ப்புகளும் தற்போது சிறைகுள்ளும் வந்துவிட்டது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் தனித்திறமை கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் சேலம் மத்திய சிறைச்சாலை நிர்வாகம் புதியயுக்திகளை கையாண்டு அவர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜெயில் சிங்கர் என்ற நிகழ்ச்சியை நடத்தி ஜெயில்சிங்கர் 2024 என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது. சிறை நிர்வாகம் சேலம் மத்திய சிறையில்சுதந்திர தின விழாவை யொட்டி பேச்சு போட்டி கட்டுரை போட்டி மற்றும் பாட்டு போட்டி நடைபெற்றன ஜெயில் சிங்கர் என்ற தலைப்பில் நடைபெற்ற பாட்டு போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட சிறைவாகளுக்கு ஏற்கனவே ஆடிசன் நடத்தப்பட்டு பாடகர்கள் இறுதி தேர்வுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் நேற்று நடைபெற்ற ஜெயில் சிங்கர் போட்டியில் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினார்.
இதற்காக சிறைவாசிகளுக்குள்ளே நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களே மற்ற சிறைவாசிகளுக்கு மதிப்பெண்களை வழங்கினார் இறுதியில் நல்ல முறையில் பாடி அனைவரையும் பாராட்டைப் பெற்று நல்ல மதிப்பெண்களைப் பெற்ற சிறைவாசி ஜெய்சங்கர் என்பவர் 2024 ஜெயில்சிங்கர் என்ற பட்டத்தினை தட்டிச் சென்றார்.
சேலம் மத்திய சிறையில் கண்காணிப்பாளர் பொறுப்பு வினோத் கலந்து கொண்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தார் 200க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் முன்னிலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சிறைவாசிகள் தயக்கமின்றி தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்தியது மற்ற சிறைவாசிகளுக்கு தன்னம்பிக்கை வளர்ப்பதாகவே அமைந்த உள்ளது.
சிறைவாசம் என்றால் கொடுமை துன்பம் கஷ்டம் தண்டனை என அனுபவித்து வந்த காலத்தை சிறைவாசத்தை இசை வாசகமாகவே மாற்றும் சிறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சிறைவாசிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும் சிறைவாசத்தில் சமுதாய சீர்திருத்த கருத்துக்களை புகுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி வெளியில் வரும்போது நல்ல மனிதர்களாக வாழ வழி வகுக்க நடவடிக்கை எடுத்து வரும் சிறை அதிகாரிகளின் உன்னத பணி பாராட்டத்தக்க வகையில் உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0 coment rios: