சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 219 வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் அமைச்சர் கே.என். நேரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி, மாதேஸ்வரன் ஆகியோர் சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது அவரது 219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டை உயிரோடு பிரிவு நினைவு மணி மண்டபத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் கே.என் நேரு, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அருண்கபிழன் மலர்மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: