இதனையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பெருந் தேர்த்திருவிழா இன்று (7ம் தேதி) காலை நடந்தது. புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, சப்பார பல்லக்கில் காமாட்சியம்மன் முன்னே செல்ல, ஒன்றன்பின் ஒன்றாக, சுமார் 58 அடி உயர மகமேரு தேரில் பெருமாள் சுவாமி மற்றும் 60 அடி உயரமுள்ள தேரில் குருநாதசுவாமி பின்னே சென்றன.
தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். கோயில் மடப்பள்ளியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனக்கோயிலுக்கு, தேர்கள் பக்தர்கள் கூட்டத்தில் மிதந்தபடி சென்றது. அங்கு, சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் வனக்கோயில் வளாகத்திலேயே குடும்பம் குடும்பமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.
மீண்டும் நாளை (8ம் தேதி) அதிகாலை அங்கிருந்து மூன்று சுவாமிகளும் மடப்பள்ளிக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், இந்தத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற குதிரை மற்றும் மாட்டு சந்தை தொடங்கியது. இதை ஆயிரக்கணக்கான கண்டுகளித்து வருகின்றனர்.
தொடர்ந்து, 10ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
0 coment rios: