சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சின்ன தயாரிப்பாளர்களை ஒருபோதும் நசுக்காதீர்கள் ; என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் புற முதுகில் குத்துவது போல் செயல்படுகிறார்கள் என சேலத்தில் நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், சேலத்தை அடுத்துள்ள கருப்பூர் பகுதியைச் சார்ந்த தமாக சேலம் மேற்கு மாவட்ட தலைவரும், சிறந்த ஆன்மீகவாதியும் மற்றும் தொழில் அதிபர்களும் ஆன சுசீந்திரகுமார் மற்றும் ரகுநந்தகுமார் ஆகியோர்களுக்கு சொந்தமான ராஜம் திரையரங்கில் திரைப்படத்தை ரசிகர்களுடன் நடிகர் ரஞ்சித் பார்த்து ரசித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், கவுண்டம்பாளையம் திரைப்படம் காதலுக்கு எதிரான படம் அல்ல. நாடக காதலுக்கு எதிரான படம். படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக கூறி என்னை எதிர்ப்பவர்கள் படம் பார்க்காமல் பேசாதீர்கள். அறிவு முதிர்ச்சி இல்லாதவர்கள் எனது படத்தை பார்க்க வராதீங்க என்ற அவர், சின்ன தயாரிப்பாளர்களை ஒருபோதும் நசுக்காதீர்கள். அவ்வாறு நசுக்கும் போது எவ்வளவு பொருள் நஷ்டம் ஏற்படுகிறது என்பது அவர்களுக்கு தான் தெரியும். என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் புற முதுகில் குத்துவது போல் செயல்படுகிறார்கள் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஞ்சித், படத்தின் பெயரில் ஜாதி எதுவும் இல்லை. தாய்மார்கள் வெறுக்கும் வகையில் ஒருபோதும் நடக்க மாட்டேன். ஊடகங்கள் மாபெரும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்க்க இழிவான காட்சிகளை பதிவு செய்து வருகிறார்கள். சினிமாவில் இது போன்ற காட்சிகளை கட்டுப்படுத்த சென்சார் உள்ளது. ஆனால் சமூக வலைதளங்களை கண்காணிக்க சென்சார் இல்லை. அவரவர் மனசாட்சியே சென்சார். ஆகையால் சமூக வலைதளங்களில் ஆரோக்கியமான சூழல் இல்லை இதற்கு கட்டுப்பாடு அவசியம் என்றார். ஆணவ படுகொலை என்பது பெற்றோர்கள் அவர்கள் பிள்ளை மீது வைத்திருக்கக்கூடிய பாசத்தின் வெளிப்பாடுதான்.காதலுக்காக பெற்றவர்களை ஏமாற்றாதீர்கள் என்றார்.
0 coment rios: