பெருந்துறையில் முதன்முறையாக எந்திர விலங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜே.கே என்கிற ஜெயக்குமார் அவர்களும் பெருந்துறை பேரூராட்சி தலைவர் ஓ சி வி ராஜேந்திரன் அவர்களும் திறந்து வைத்தனர்.
தினேஷ்குமார் முன்னிலையில், ஜெயபிரகாஷ், வக்கீல் சுவாமிநாதன், பிசி முத்துச்சாமி, செந்தில்குமார், வைஸ் சேர்மன் சண்முகம், இன்ஃப்ராடெக் சக்தி கேபி சாமி ,கே பி எஸ் மணி ,கல்யாண சுந்தரம் ,சம்பத்,ex.mla பொன்னுசாமி முருகசாமி, சரஸ்வதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் போன்ற பல்வேறு முக்கிய நபர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்..
இப்பொருாட்சியை பற்றி அதன் உரிமையாளர் தினேஷ் குமார் கூறும்போது...
இங்கே டைனோசர், கொரில்லா, பாண்டா, டைகர் ,ஆப்பிரிக்கன் யானை ,சிங்கம் ,கரடி, அனகோண்டா பாம்பு, போன்ற விலங்குகள் ராட்சச வடிவில் மக்களை கவரும் வண்ணத்தில் ரோபோடிக் முறையில் தத்ரூபமாக உள்ளது என்றும் பிரம்மாண்டமான ராட்சச ராட்டினங்கள், உணவு அரங்குகள், பேய் வீடு ,பிரேக் டான்ஸ் ,கொலம்பஸ், பேன்சி பலூன், ஜம்பிங் நெட் ,டிராகன் டிரெயின் ,மற்றும் முக்கியமாக சாகச வீராங்கனைகள் செய்யும் மரணக்கிணறு மக்களை ஆச்சரியத்தில் மூழ்கும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளோம்..
மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களையும், 40 விதமான வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளையும், பல்வேறு உணவு அரங்குகளையும் உள்ளே அமைத்துள்ளோம். வரும் நபர்களுக்கு மிகச்சிறந்த முறையில் வாகன வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளோம்..
இப்பொருட்காட்சியானது 1/8/ 2024 முதல் 8 /9/ 2024 வரை மாலை 4 மணி முதல் இரவு 9:30 மணி வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் ..இங்கு வரும் மக்கள் குடும்பத்துடன் ரசித்து மகிழ இது ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமில்லை என தெரிவித்தார்.. வந்திருந்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் உதயகுமார் மற்றும் நாசர் நன்றி கூறினார்.
0 coment rios: